ஆப்நகரம்

அவினாசி - அத்திக்கடவு கனவு திட்டத்துக்கு ரூ 250 கோடி ஒதுக்கீடு

கோவை, திருப்பூர் மக்களின் கனவு திட்டமான அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TOI Contributor 16 Mar 2017, 11:26 am
கோவை, திருப்பூர் மக்களின் கனவு திட்டமான அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil tamil nadu budget 2017 rs 250 crore for athikadavu avinashi project
அவினாசி - அத்திக்கடவு கனவு திட்டத்துக்கு ரூ 250 கோடி ஒதுக்கீடு


கோவை,திருப்பூர் மாவட்டங்களை இனைக்கும் அவினாசி ஒருகாலத்தில் மிக வறட்சியாக இருந்தது. அவினாசி சுற்றியுள்ள பகுதிகளை வளப்படுத்த பவாணி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை, அவினாசியிலிருந்து, அத்திகடவு வரை உள்ள பகுதிகளுக்கு வழங்கும் திட்டம் தான் இது.

பாசன திட்டம் என்பதை தாண்டி,கால்வாய்கள் மூலம் குளம் ,குட்டை, கண்மாய்களை இந்த உபரி நீர் கொண்டு நிரப்ப வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கம்.



பவாணி அணையிலிருந்து 53 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரை அவினாசியை சுற்றியுள்ள 2000 கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பும் திட்டம் இது.

இந்த திட்டத்துக்கு இந்த தமிழக பட்ஜெட்டில் ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிலாவது இந்த திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படுமா எனபதை பொறுத்திருந்து பார்போம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்