ஆப்நகரம்

ஜூன் 1 முதல் ACT Fibernet பயனர்களுக்கு ஆப்பு; அந்த இமெயில் வந்துச்சா?

ஆக்ட் ஃபைபர்நெட் ஜூன் 1 முதல் அதன் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான வாடகையை அதிகரிக்கிறது!

Samayam Tamil 31 May 2020, 12:46 pm
ஆக்ட் ஃபைபர்நெட் அதன் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான வாடகையை அதிகரிக்கும் எட்டு நகரங்களில் பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், டெல்லி, விஜயவாடா, விசாக் மற்றும் குண்டூர் ஆகியவைகள் அடங்கும். பெரும்பாலான நகரங்களில் இரண்டு முதல் நான்கு சதவிகிதம் வரையிலான விலை உயர்வு இருக்கும் என்று ஆக்ட் ஃபைபர்நெட் கூறியுள்ளது.
Samayam Tamil ACT Fibernet Price HIke


உதாரணமாக, ஆக்ட் சில்வர் விளம்பர திட்டத்தின் டெல்லி விலையானது தற்போது ரூ.799 ஆக உள்ளது. முன்னதாக இது ரூ.749 ஆக இருந்தது, அதாவது ரூ.50 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது. புதிய மற்றும் திருத்தப்பட்ட விலைகள் கூடிய விரைவில் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் ஆப்பில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ட் ஃபைபர்நெட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சமீபத்திய அப்டேட்டைப் பற்றிய மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளது. அதில் ஜூன் 1 முதல் புதிய விலை நிர்ணயம் நடைமுறைக்கு வரும் என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய அன்லிமிடெட் பிளான் அறிமுகம்; BSNL அதிரடி!

மேலும் "கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க விலை அதிகரிப்பு மற்றும் சிறந்த இணைய அனுபவத்திற்கான முதலீடுகள் இருந்தபோதிலும், நாங்கள் எங்களின் விலை நிர்ணயத்தை நிலையாக வைத்திருக்கிறோம். எங்கள் துறை கடந்த சில ஆண்டுகளில் கணிக்கமுடியாத வகையில் சில சவால்களை எதிர்கொண்டது, இது செயல்பாட்டு செலவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது ” என்று நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.

இலவசங்களுக்குப் பிறகு இந்த திருத்தம் வருகிறது!

ஏப்ரல் 30 வரை ஆக்ட் ஃபைபர்நெட் 300Mbps அளவிலான வேகம் மற்றும் FUP ஆகியவற்றை இரண்டு வெவ்வேறு கட்டங்களில் இலவசமாக வழங்கிய பின்னர் இந்த சமீபத்திய திருத்தத்தை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலவச நன்மைகள் வீட்டிலிருந்து வேலை செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக ஏராளமான மக்கள் வீட்டுக்குள் தங்கியிருப்பதால், மார்ச் மாதத்தில் அதன் அதிகபட்ச டிராபிக்கில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஆக்ட் ஃபைபர்நெட் வெளிப்படுத்தி உள்ளது.

லாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்கலாம்னு நினைச்சீங்களா? ஐயோ பாவம்!

பெங்களூரை தளமாகக் கொண்ட இந்நிறுவனம் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஸ்டேஜ்-2 சந்தைகள் உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் சேவையின் தேவைகள் அதிகரிப்பதைக் கவனித்தது. இருப்பினும் கூட, டிராபிக்கில் வளர்ச்சியைக் கண்ட ஒரே நிறுவனம் ஆக்ட் ஃபைபர்நெட் அல்ல. பிற ISP-களும் தங்கள் டிராபிக்கில் நல்ல முன்னேற்றதை கண்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்