ஆப்நகரம்

நாங்களும் இறங்கி வருவோம்ல; இந்தா வச்சிக்கோங்க; மலிவு ஆஃபர்கள் தரும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

TNN 7 Oct 2017, 11:49 am
சென்னை: ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.
Samayam Tamil airtel announces latest unlimited voice call plans
நாங்களும் இறங்கி வருவோம்ல; இந்தா வச்சிக்கோங்க; மலிவு ஆஃபர்கள் தரும் ஏர்டெல்!


செல்போன் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம், பல்வேறு சலுகைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அளித்து வருகின்றன.

இதில் ஏர்டெல்லின் பேக்குகள் அனைத்தும், பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட அதிகம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தக்க வைத்துக் கொள்ள, ஏர்டெல்லும் மலிவு விலை ஆஃபர்களை அளிக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி, சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ஏர்டெல்லின் ஆஃபர்கள் குறித்து இங்கே காணலாம்.

* ரூ.199 பேக் - 1 ஜிபி/ஒரு நாள் & அன்லிமிடெட் வாய்ஸ்(28 நாட்கள் வேலிடிட்டி)

* ரூ.399 பேக் - 1 ஜிபி/ஒரு நாள் & அன்லிமிடெட் வாய்ஸ்(70 நாட்கள் வேலிடிட்டி)

* ரூ.60 பேக் - ரூ.53 டாக்டைம் (அன்லிமிடெட் வேலிடிட்டி)

* ரூ.90 பேக் - ரூ.88 டாக்டைம் (அன்லிமிடெட் வேலிடிட்டி)

* ரூ.149 பேக் - 2 ஜிபி & அன்லிமிடெட் வாய்ஸ்(28 நாட்கள் வேலிடிட்டி)

இதற்கிடையில் ஏர்டெல்லின் மலிவு விலை ஸ்மார்ட்போன், வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Airtel announces latest unlimited voice call plans.

அடுத்த செய்தி

டிரெண்டிங்