ஆப்நகரம்

ரீசார்ஜ் செய்யாத பயனர்களுக்கு இலவச டேட்டா; ஏர்டெல் அதிரடி!

தேர்ந்தெடுக்கப்பட்ட செயலற்ற ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 1 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்குகிறது.

Samayam Tamil 11 Aug 2020, 5:12 pm
ஏர்டெல் இப்போது தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 1 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை மூன்று நாள் சோதனை அடிப்படையில் இலவசமாக வழங்குகிறது. இது தங்களது ப்ரீபெய்ட் எண்களை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Airtel Free Data


இந்த புதிய சோதனை குறித்து தகுதியான பயனர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் ஒரு எஸ்எம்எஸ் செய்தியை அனுப்புகிறது. மூன்று நாட்களுக்கு இலவசமாக உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளுடன் பயனர் 1 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையும் பெறுவர் என்பதே அந்த எஸ்எம்எஸ் ஆகும். குறிப்பிட்ட மெசேஜின் ஸ்கிரீன் ஷாட்டை ஒன்லி டெக் வலைத்தளம் பகிர்ந்துள்ளது.

கூகுள் பிக்சல் 5 ரெடி; நீங்க ரெடியா? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள்?

மேலும் அந்த மெசேஜ், ப்ரீபெய்ட் வாடிக்கையாளரை தொடர்ந்து ஏர்டெல் நன்மைகளைப் பெற வரம்பற்ற பேக் மூலம் அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்யும்படியும் கேட்கிறது. பொதுவாக குறிப்பிட்ட ஏர்டெல் எண் ஒரு மாதத்திற்கும் மேலாக ரீசார்ஜ் செய்யப்படவில்லை என்றால் மட்டுமே இம்மாதிரி கேட்கும்.

கடந்த மாதமும், ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு இலவசமாக 1 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கியது, ஆக இது ஏர்டெல் நிறுவனத்தின் மிகவும் புத்தம் புதிய நடவடிக்கை அல்ல இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு தோராயமாக கிடைக்கும் இந்த சலுகையை நீங்கள் பெற்று உள்ளீர்களா என்று அறிய பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் இலவச டேட்டா + வாய்ஸ் கால் குறுஞ்செய்தி உங்களுக்கு வந்துள்ளதா என்பதின் வழியாக அறியலாம்.

ஆக நீங்க இப்போது ஏர்டெல் ரூ.48 டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்தால் உங்கள் ப்ரீபெய்ட் கணக்கில் மொத்தம் 4 ஜிபி டேட்டா இருக்கும். அதாவது வழக்கமான 3 ஜிபி டேட்டா உடன் இலவசமாக கிடைக்கும் கூடுதல் 1 ஜிபி தேடவும் கிடைக்கும். ஆகமொத்தம் 4 ஜிபி ஆகும்.

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் அதன் புதிய ஆப்டிக் ஃபைபர் இணைப்புடன் அந்தமான் மற்றும் நிக்கோபாரில் ‘அல்ட்ரா-ஃபாஸ்ட் 4 ஜி’ சேவைகளை அறிமுகப்படுத்தியது. 4 ஜி சேவைகளை அதிகரிக்க சென்னை மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை இணைக்கும் கடலுக்கடியில் கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

ரெட்மி நோட் நோட் 8 ப்ரோவின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்!

கடல் மற்றும் நிலம் முழுவதும் தொலைதொடர்பு சமிக்ஞையை அனுப்ப நில அடிப்படையிலான நிலையங்களுக்கு இடையில் உள்ள கடற்பரப்பில் நீர்மூழ்கி தகவல் தொடர்பு கேபிள் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்