ஆப்நகரம்

3 மாதத்துக்கு நெட்ஃபிலிக்ஸ் இலவசம்: ஏர்டெல் அதிரடி

ஏர்டெல் - நெட்ஃபிலிக்ஸ் கைகோர்த்துள்ள நிலையில், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் 3 மாதத்திற்கு இலவசமாக திரைப்படம் பார்க்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Aug 2018, 8:45 pm
ஏர்டெல் - நெட்ஃபிலிக்ஸ் கைகோர்த்துள்ள நிலையில், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் 3 மாதத்திற்கு இலவசமாக திரைப்படம் பார்க்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil airtel netflix


உலக அளவில் தற்போது ஸ்மார்ட்போன் ஆப் மூலம் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், பல்வேறு மொபைல் ஆப்கள் இருந்தாலும், நெட்ஃபிலிக்ஸ் ஆப் மூலம் புதிய படங்களை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனமும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் இந்தியாவில் தங்களது செல்வாக்கை மேம்படுத்தும் வகையில், தற்போது கை கோர்த்து உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி, ஏர்டெல் போஸ்டபெய்டு மற்றம் பிராட்பெண்ட் பயன்படுத்துபவர்களுக்கு, 3 மாதம் வரையில், நெட்ஃபிலிக்ஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஏர்டெ் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் மை ஏர்டெல் ஆப் மூலம் நெட்ஃபிலிக்ஸ் பெற முடியும். இது குறித்து கூடுதல் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில், திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சகிளை நேரலையாக வழங்கி வருகிறது. எனவே தான் ஏர்டெல் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்கள் ஜியோ பக்கம் சென்று விடாமல் இருக்க இது போன்ற ஆஃபர்களை வழங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
tamil

அடுத்த செய்தி

டிரெண்டிங்