ஆப்நகரம்

ஏர்டெல் - அமேசான் கூட்டணியில் வெறும் ரூ.3,399க்கு 4ஜி ஸ்மார்ட்போன்!

ஏர்டெல், அமேசான் நிறுவனங்கள் இணைந்து, பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 May 2018, 4:17 pm
டெல்லி: ஏர்டெல், அமேசான் நிறுவனங்கள் இணைந்து, பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samayam Tamil Airtel Amazon Offer


அமேசான் இந்தியா இணையதளத்தில் 65க்கும் மேற்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்கப்பட்டு வருகிறது. அதில் சாம்சங், ஒன் பிளஸ், சயோமி, ஹானர், எல்.ஜி, லெனோவா, மோட்டோ உள்ளிட்ட பிராண்ட்கள் அடங்கும்.

எனது முதல் ஸ்மார்ட்போன் திட்டம்(Mera Pehla Smartphone Plan) மூலம் 4ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போது, ரூ.2,600 கேஷ்பேக் கிடைக்கும். அதில் ரூ.2,000 தொகையானது 36 மாதங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும்.

மீதியுள்ள ரூ.600 தொகை அமேசான் இந்தியா இணையதளத்தில் ஏர்டெல் எண்ணிற்கு ரீ-சார்ஜ் செய்யும் போது அளிக்கப்படும். அமேசான் பே இணையதளத்தில் ஒவ்வொரு மாத ரீ-சார்ஜிற்கும் ரூ.25 என 24 மாதங்கள் வரைப் பெறலாம்.

குறைந்தது ரூ.169க்கு ஏர்டெல் ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். இதன்மூலம் 24 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் 1 ஜிபி வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி வானி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

அமேசான் இணையதளத்தில் ஸ்மார்ட்போன் வாங்கிய பின், 18 மாதத்தில் ரூ.3,500 வரை ரீ-சார்ஜ் செய்தால் முதல் தவணையாக ரூ.500 கிடைக்கும்.

அடுத்த 15 மாதங்களில் ரூ.3,500க்கு வாடிக்கையாளர்கள் ரீ-சார்ஜ் செய்தால் ரூ.1,500 பெறுவர். இப்படியாக ரூ.2,000 வரை ஏர்டெல் சலுகை தருகிறது.

Airtel ties up with Amazon to offer 4G smartphones starting Rs 3,399.

அடுத்த செய்தி

டிரெண்டிங்