ஆப்நகரம்

வணிக ரீதியான ட்ரோன் பயன்பாடு: டிச., 1 முதல் அனுமதி

வணிக ரீதியாக ட்ரோன்களைப் பயன்படுத்த வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அனுமதி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Aug 2018, 5:53 pm
வணிக ரீதியாக ட்ரோன்களைப் பயன்படுத்த வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அனுமதி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil dronenew-k3JB--621x414@LiveMint


இது குறித்து திங்கட்கிழமை மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், ரியல் எஸ்டேட் திட்டத்துக்கான பறவைக்கோண படப்பிடிப்பு, சூரிய மற்றும் காற்றாலை மின் நிலையங்களில் கண்காணிப்பு, விவசாயத்துக்கு பயன்படும் உரங்கள் டெலிவரி, பேரிடர் மீட்பு, கனிமங்களை கண்டிபிடித்தல் மற்றும் ஷாப்பிங் போன்ற பல்வேறு தேவைகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதற்கட்டமாகப் பகல் நேரத்தில் மட்டும் 400 அடி உயரம் வரையில் டிரோன்கள் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 முதல்தான் அந்த அனுமதி வழங்கப்படுகிறது. அதுவரை தற்போது உள்ளதைப் போல ட்ரோன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் சில நாடுகளில் ட்ரோன் மூலம் பொருட்களை டெலிவரி செய்வது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்