ஆப்நகரம்

Amazon: சம்மர் சேல் ஆஃபர்..! இன்றே கடைசி..!!

அமேசான் நிறுவனத்தின் சம்மர் சேல் ஆஃபர் இன்றோடு நிறைவு பெறுகிறது. இதில் பிரபல ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Samayam Tamil 7 May 2019, 9:46 am
அமேசான் நிறுவனத்தின் சம்மர் சேல் ஆஃபர் இன்றோடு நிறைவு பெறுகிறது. இதில் பிரபல ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Samayam Tamil Amazon Summer Sale Starts


அமேசான் நிறுவனத்தின் சம்மர் ஸ்பெஷல் ஆஃபர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. 4 முதல் 7ம் தேதி வரையில் நான்கு நாட்களும் சிறப்பு தள்ளுபடி விற்பனை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த சம்மர் சேலில், 10 கோடிக்கும் அதிகமான பொருட்களுக்கு ஆஃபர்கள் உள்ளன. ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகளுக்கு 40% வரையில் தள்ளுபடி உள்ளது. குறிப்பாக அதிக ரேட்டிங் பெற்ற ஒன்பிளஸ் 6T, ரெட்மி ஒய்3, ரியல்மி யு1, சாம்சங் கேலக்ஸி எம்20 ஆகியவற்றுக்கு 40% வரையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், வட்டியில்லா இஎம்ஐ ஆகியவை உள்ளது.

இதே போல் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சேஃபா, மெத்தை என பலத்தரப்பட்ட பொருட்களுக்கும் 60 சதவீதம் வரையில் ஆஃபர்கள் உள்ளன. புத்தகங்கள், எண்டர்டெய்ன்மென்ட், ஜிம் வொர்க்அவுட் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு அதிகபட்சமா 70 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது. அமேசான் பே பேலன்ஸ் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 2,400 ரூபாய் வரையில் கேஷ் பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது. எனவே, நீண்ட நாள் பல பொருட்கள் வாங்க நினைத்த வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்