ஆப்நகரம்

இதுவரை இல்லாத 'சம்மர் சேல்’ - 40% வரை ஆச்சரிய தள்ளுபடி தரும் அமேசான்!

ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி தரும் வகையில், அமேசான் சம்மர் சேல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 29 Apr 2019, 9:02 pm
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக அமேசான் விளங்குகிறது. வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது, சிறப்பு அதிரடி தள்ளுபடிகளை அளித்து வருகிறது.
Samayam Tamil Amazon Summer Sale


இந்நிலையில் கோடைக் காலத்தை மையமாகக் கொண்டு, சம்மர் சேல் திருவிழாவை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மே 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அமேசான் ஆன்லைன் ’சம்மர் சேல்’ நடைபெறுகிறது.

இதில் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் மே 3ஆம் தேதி, முன்னதாகவே ‘சம்மர் சேல்’ தொடங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் திருவிழாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் மீது அதிக சலுகைகளை வாரி வழங்குகிறது.

குறிப்பாக மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிகபட்சமாக 40% வரை தள்ளுபடியை அளிக்கிறது.

அவற்றில் ஒன் பிளஸ் 6டி, ரெட்மி 6ஏ, ரியல்மி யு1, ஹானர் பிளே, விவோ நெக்ஸ், ஐ போன் எக்ஸ் ஆகிய போன்கள் அதிரடியான தள்ளுபடிகளை அமேசான் அறிவித்துள்ளது. இதனை ஆஃபர் காலத்தில் வாடிக்கையாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்