ஆப்நகரம்

ஐபோன் X, மேக்புக் ப்ரோவில் பிரச்சனையா? இலவச பழுது நீக்க வசதி அளிக்கும் ஆப்பிள்!

புதுடெல்லி: தனது மாடல்களில் ஏற்பட்ட பிரச்சனைகளைச் சரிசெய்ய இலவச பழுது பார்க்கும் வசதிக்கு ஆப்பிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

Samayam Tamil 11 Nov 2018, 4:11 pm
ஸ்மார்ட்போன் உலகில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் இருவிதமான பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஐபோன் X, 13 இஞ்ச் மேக்புக் ப்ரோ மாடலில் ஏற்பட்டுள்ளன.
Samayam Tamil iPhoneX


இதுகுறித்து பேசிய கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குபர்டினோ, ஐபோன் X மாடலின் சில போன்களில் டச்-ஸ்கிரீன் சரியாக வேலை செய்யவில்லை. டச்-ஸ்கிரீன்களைத் தொடாத சமயத்திலும் டிஸ்பிளே வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஐபோன் X விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பரில் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதால், ஐபோன் Xன் விற்பனை நிறுத்தப்பட்டது.

இருப்பினும் ஐபோன் X மாடலில் டச்-ஸ்கிரீன் பிரச்சனை இருப்பதை, வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக ஆன்லைனில் குறிப்பிட்டு வருவதாகக் கூறினார். இதுகுறித்து விளக்கமளித்த ஆப்பிள் நிறுவனமும், 13 இஞ்ச் மேக்புக் ப்ரோவின் குறிப்பிட்ட மாடல்களில் டேட்டா லாஸ், டிரைவ் பெயிலர் ஆகிய பிரச்சனைகள் இருக்கின்றன.

இந்த லேப்டாப்கள் கடந்த ஜூன் 2017 முதல் ஜூன் 2018 வரை விற்கப்பட்டன. இதில் 128 ஜிகாபைட் அல்லது 256 ஜிபி சேமிப்பு வசதி, நோ டச்-பார் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன.

எனவே பிரச்சனையுள்ள லேப்டாப்களை உடனடியாக பழுது பார்க்கக் கொண்டு வருமாறு அறிவுறுத்தி உள்ளது. ஐபோன் X மாடலுக்கு இலவச ஸ்கிரீன் மாற்ற வசதி, மேக்புக் ப்ரோவிற்கு இலவசமாக பழுது பார்க்கும் வசதியை ஆப்பிள் நிறுவனம் செய்து தருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்