ஆப்நகரம்

ஐபோன் 11 மீது செம்ம ஆபர்; இதைவிட கம்மி விலைக்கு விற்கப்பட்டதே இல்லை!

ஆப்பிள் ஐபோன் 11 எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மலிவான விலைக்கு அமேசான் பிரைம் டே விற்பனை 2020-இல் வாங்க கிடைக்கிறது.

Samayam Tamil 6 Aug 2020, 6:35 pm
ஆப்பிள் நிறுவனம் தனது லேட்டஸ்ட் மாடலான ஐபோன் 11-ஐ இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. அது ரூ .64,900 என்கிற ஆரம்ப விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.
Samayam Tamil iPhone 11 Offer


இருப்பினும், இன்று தொடங்கி உள்ள அமேசான் பிரைம் டே விற்பனையின் போது, ஐபோன் 11 அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து எப்போதும் இல்லாத அளவிற்க்கு மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த 2 நாட்களுக்கு அமேசானில் ஆபர் மழை; மிஸ் பண்ண கூடாத சலுகைகள் இதோ!

இந்த சிறப்பு விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் ஐபோன் 11 மீது ரூ.8,400 என்கிற தள்ளுபடி பெறலாம். இது லேட்டஸ்ட் ஐபோன் 11 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.54,990 ஆக குறைக்கிறது.

இந்த தள்ளபடி ஊதா, பச்சை, சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை உள்ளிட்ட ஐபோன் 11-இன் அனைத்து வண்ண விருப்பங்களிலும் கிடைக்கிறது. மேலும், ஐபோன் 11 மாடலின் 128 ஜிபி மாடலும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக குறிப்பிட்ட மாடலின் அசல் விலையை விட (ரூ.73,600 க்கு) இது மிகவும் குறைவான விலைக்கு (ரூ.65,500) வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த வேரியண்ட் ரூ.8,100 என்கிற தள்ளுபடியை பெற்றுள்ளது.

ஐபோன் 11 பிரதான அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.1 இன்ச் Liquid Retina டிஸ்பிளே
ப்ராசஸர்: ஆப்பிளின் புதிய A13 Bionic chip
பேட்டரி ஆயுள்: iPhone XR-ஐ விட ஒரு மணி நேரம் அதிக பேட்டரி ஆயுள்.

கேமராத்துறை:

ஐபோன் 11 ஆனது அதன் பின்பக்கத்தில் டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது எஃப் / 1.8 மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான வைட்-அங்கிள் லென்ஸ் + எஃப் / 2.4 மற்றும் 120- டிகிரி ஃபீல்ட் கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இதன் புதிய கேமரா மென்பொருள் அம்சங்களில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் எச்டிஆர், மேம்படுத்தப்பட்ட நைட் மோட் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெயிட் மோட் ஆகியவைகள் உள்ளன. மேலும் இதன் இரட்டை பின்புற கேமராக்கள் ஆனது 4கே வீடியோ பதிவை 60fps இல் ஆதரிக்கின்றன மற்றும் ஐபோன் எக்ஸ்ஆரில் உள்ளதை விட 36 சதவீதம் பிரகாசமான ஃபிளாஷ் மூலம் இணைக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 10 வரை பிளிப்கார்ட்டில் ஆபர் மழை; குறிப்பாக இந்த 4 போன்கள் மீது!

ஐபோன் 11-ல் உள்ள முன் பக்க கேமராவும் ஐபோன் எக்ஸ்ஆர் உடன் ஒப்பிடும் போது ஒரு படி மேலே உள்ளது. ஐபோன் 11-ல் ஒரு 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது, இது 4கே மற்றும் ஸ்லோ-மோ வீடியோக்களை படம்பிடிக்கும் திறனை கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்