ஆப்நகரம்

Apple Macbook விலை குறைப்பு! 15 இன்ச் லேப்டாப் வருகையால் விலை குறைந்தது!

Apple நிறுவனத்தின் WWDC 2023 நிகழ்ச்சியில் புதிய Macbook Air M2 15 இன்ச் லேப்டாப் வெளியானது. இந்த புதிய லேப்டாப் வருகையால் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்யும் MacBook Air M2 13 இன்ச் லேப்டாப் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ஆப்பிள் 13 இன்ச் லேப்டாப் 1,14,900 லட்சம் ரூபாய் விலையில் தொடங்குகிறது.

Authored byவெங்கட கிருஷ்ணன் | Samayam Tamil 7 Jun 2023, 11:05 am

ஹைலைட்ஸ்:

  • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 15 இன்ச் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • உலகின் சிறந்த 13 இன்ச் லேப்டாப் மாடலாக Apple Mac book air 13 இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Apple MacBook Air 13
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 13 இன்ச் லேப்டாப் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த எடை குறைவான MacBook Air M2 13 இன்ச் லேப்டாப் கடந்த ஆண்டு ஜூன் 2022 மாதம் வெளியானது. இதில் ஆப்பிள் M2 சிப் வசதி, 13.6 இன்ச் லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது.
Apple MacBook Air M2 (13இன்ச்) விவரம்
இதில் ஒரு 13.6 இன்ச் Liquid Retina டிஸ்பிளே வசதி, மெலிதான பேசல் ஸ்க்ரீன், M2 சிப் வசதி, MacOS (அப்டேட் மூலம் MacOS Ventura பெறமுடியும்), 2TB SSD ஸ்டோரேஜ் வசதி உள்ளது. புதிய MacOS Ventura மூலமாக நமக்கு இன்னும் கூடுதல் திறன் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.


இதில் 1080P HD (1920x1080 Pixels), வெப் கேமரா, 4 ஸ்பீக்கர் சிஸ்டம் வசதி, Immersive Spatial Audio, Dolby Atmos வசதி, Magic Keyboard, Force Touch Trackpad, USB Type C/Thunder Bolt 4 Ports, 3.5mm ஹெட் போன் ஜாக், 67W USB Type C சார்ஜ்ர், 18 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி சார்ஜ், Mag Safe சார்ஜிங் வசதி உள்ளது.

விலை விவரம் (Apple MacBook M2 13 Price)

இந்த 13 இன்ச் ஆப்பிள் MacBook Air M2 சிப் 1,19,900 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இந்த லேப்டாப் Midnight Silver, Space Grey, Starlight ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் 256GB மற்றும் 512GB SSD வேரியண்ட் 1,14,900 லட்சம் ரூபாய் மற்றும் 1,4,900 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் Apple Macbook Air M2 லேப்டாப் ஆப்பிள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்
எழுத்தாளர் பற்றி
வெங்கட கிருஷ்ணன்
நான் B.Venkatakrishnan B.E (Mechanical). நான் ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், வைரல், சுற்றுலா சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதி வருகிறேன். இதில் முக்கியமாக ஆட்டோமொபைல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம் கொண்டவன். புதிய கார்,புதிய பைக்குகள், புதிய டெக்னாலஜி போன்றவற்றின் மீது ஆர்வம் அதிகம். இப்போது Times Internet சமயம் தமிழ் இணையத்தில் ‘Digital Content Producer’ பணி செய்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்