ஆப்நகரம்

ஒளியை ஸ்லோமோஷனில் படம்பிடிக்கும் கேமரா கண்டுபிடிப்பு!

ஒளியின் வீச்சையும் மெதுவாக்கிப் படம்பிடிக்கும் திறன் (ஸ்லோமோஷன்) இந்த கேமராவின் சிறப்புஅம்சமாகக் கருதப்படுகிறது.

Samayam Tamil 15 Oct 2018, 9:49 pm
ஒளியை ஸ்லோமோஷனில் படம்பிடிக்கும் திறன் கொண்ட உலகின் அதிவேகமான கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 4-worldsfastes


அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் க்யூபெக் பல்கலைக்கழகமும் இணைந்து T-CUP என்ற கேமராவை உருவாக்கியுள்ளன. இது உலகின் அதிவேகமான கேமரா என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

ஒரு விநாடியில் 10 ட்ரில்லியன் ப்ரேம்களை படம்பிடிக்கும் சக்தி படைத்தது இந்த கேமரா. குறுக்கப்பட்ட அதிதீவிரவேக படப்பிடிப்பு (Compressed Ultrafast Photography - CUP) என்ற முறையின் அடிப்படையில் இந்த கேமரா செயல்படுகிறது.
இதன் ஸ்கேனர்களில் ஃபெம்டோ விநாடி ஸ்ட்ரீக் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நானோ விநாடியின் மில்லியன் பகுப்புகளில் ஒன்று ஒரு ஃபெம்டோ விநாடி எனப்படுகிறது.

ஒளியின் வீச்சையும் மெதுவாக்கிப் படம்பிடிக்கும் திறன் (ஸ்லோமோஷன்) இந்த கேமராவின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்