ஆப்நகரம்

Google எச்சரிக்கை: இந்த 21 கேமிங் ஆப்களில் ஒன்றை கூட இன்ஸ்டால் செய்ய வேண்டாம்!

கூகுள் பிளே ஸ்டோரில் 21 ஆட்வேர் கேமிங் ஆப்ஸ் கண்டுபிடிப்பு... உடனே டெலிட் செய்யவும்... இதோ முழு லிஸ்ட்...

Samayam Tamil 27 Oct 2020, 9:00 pm
அவாஸ்ட் நிறுவனம், கூகுள் பிளே ஸ்டோரில் ஆட்வேர் குணாதிசயங்களைக் கொண்ட 21 தீங்கிழைக்கும் கேம்களை கண்டுபிடித்து புகாரளித்துள்ளது. இந்த 21 கேம்களும் வெளியே பார்க்க சாதாரண ஆப்கள் போல காட்சியளிக்கின்றன. ஆனால் உண்மையில் அவைகள் ஊடுருவும் விளம்பரங்களைக் காண்பிக்கின்றன, உடன் இதி போன்ற பிற பயன்பாடுகளையும் கேம்களையும் பதிவிறக்கம் செய்ய பயனர்களை ஈர்க்கின்றன.
Samayam Tamil Adware Gaming Apps to delete now


எந்த ரெட்மி மொபைல் மீது அதிகப்பட்ச தீபாவளி ஆபர் கிடைக்குது? இதோ முழு லிஸ்ட்!

மோசமான விடயம் என்னவென்றால், இந்த 21 கேம்களும் கிட்டத்தட்ட அனைத்துமே பதிவிறக்கம் செய்வதற்காக Google Play ஸ்டோரில் அணுக கிடைக்கின்றன.

அவாஸ்டால் அடையாளம் காணப்பட்ட இந்த 21 ஆப்கள் மற்றும் கேம்கள் ஆட்வேர் வகைக்குள் அடங்குகின்றன. அதாவது குறிப்பிட்ட 21 ஆப்களும் மற்றும் கேம்களும் எந்தவிதனான தரவையும் (அ) தகவல்களையும் திருடவில்லை அல்லது பிற தீங்கிழைக்கும் பணிகளைச் செய்யவில்லை என்றாலும் கூட, இவைகள் வருவாயை ஈட்டும் நோக்கத்தின் கீழ் பயனர்களை "சந்தேகப்படாத வண்ணம்" விளம்பரங்க்ளுக்கு இட்டுச்செல்கிறது. இந்த ஆப்கள் Android இல் நிறுவப்பட்டதுமே அவைகள் விளம்பரங்களைக் காட்டத் தொடங்குகின்றன.

Micromax In series : சியோமி & ரியல்மி பட்ஜெட் போன்களுக்கு ஆப்பு கன்பார்ம்!

சென்சார் டவர் தரவுகளின்படி, இன்றுவரை, இந்த 21 ஆப்களும், கேம்களும் (மொத்தமாக) சுமார் எட்டு மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த 21 ஆப்களின் சில டவுன்லோட் பக்கங்களில், குறிப்பிட்ட ஆப்கள் YouTube விளம்பரங்கள் மூலம் தங்கள் கவனத்தை ஈர்த்ததாகக் கூறி உள்ளனனர், காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை விட வித்தியாசமான கேமை கொண்டுள்ளனர், கேமை பதிவிறக்கிய பிறகு எக்கச்சக்கமான விளம்பரங்கள் ஸ்மார்ட்போனை ஆக்கிரமிப்பு செய்கின்றன போன்ற புகார்கள் உள்ளன.

“சாதாரண மார்க்கெட்டர்களை போலவே ஆட்வேர் டெவலப்பர்களும் சமூக ஊடக சேனல்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த 21 ஆப்கள் விஷயத்தில் YouTube வழியாக கேம்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களை அவர்கள் இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இப்படித்தான், கடந்த செப்டம்பரில், டிக்டாக் வழியாக ஆட்வேர் பரவுவதைக் கண்டோம்,“ என்று அவாஸ்ட் த்ரெட் ஆய்வாளர் ஜாகுப் வவ்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வகை மென்பொருள் ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஆப் ஆக மாறுவேடமிட்டுள்ளது, ஆனால் பல ஊடுருவும் விளம்பரங்களைக் காட்டுகிறது. சாதனங்களிலிருந்து அவை அகற்றப்படுவதைத் தடுக்க, அவர்கள் தங்கள் சின்னங்களை மறைப்பது மற்றும் பொருத்தமான தோற்றத்துடன் விளம்பரங்களைக் காண்பிப்பது போன்ற சில உத்திகளைக் கடைப்பிடிக்கிறது, அவற்றை அடையாளம் கண்டு அகற்றுவது கடினம்.

அவாஸ்ட் கண்டுபிடித்த 21 ஆட்வேர் ஆப்கள் மற்றும் கேம்களின் பட்டியல் இதோ:

Shoot Them, Crush Car, Rolling Scroll, Helicopter Attack, Assassin Legend, Helicopter Shoot, Rugby Pass, Flying Skateboard, Iron it, Shooting Run, Plant Monster, Find Hidden, Find 5 Differences, Rotate Shape, Jump Jump, Find the Differences – Puzzle Game, Sway Man, Money Destroyer, Desert Against, Cream Trip, Props Rescue.

மேற்குறிப்பிட்டுள்ள ஆப்களில், அல்லது கேம்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தால், அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்