ஆப்நகரம்

ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில் அசத்தல்; ரொம்ப வித்தியாசமா யோசிச்ச பேஸ்புக்!

சான் பிரான்சிஸ்கோ: தனது ஊழியர்களின் சமூகக் காரணிகளைக் கொண்டு போனஸ் வழங்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 6 Feb 2019, 4:35 pm
உலக அளவில் சமூக வலைதளங்களில் முன்னிலையில் இருக்கக் கூடியது பேஸ்புக் நிறுவனம். இந்நிறுவனத்தில் பணியாற்றும் 36,000 ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில் புதுமையான நடவடிக்கை கையாளப்பட்டுள்ளது.
Samayam Tamil Facebook.


அதாவது, பொய்யான தகவல்கள் பரப்புதல் போன்ற நடவடிக்கைகளின் போது, அந்நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுபோன்ற சிக்கலான சமயங்களில் பேஸ்புக் நிறுவனம் மீண்டு வர ஊழியர்கள் எப்படியெல்லாம் உதவினார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் வழக்கமான ஊழியர்களின் வளர்ச்சி, உற்பத்தி தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மாறுபட்டு சிந்தித்து போனஸ் வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனை 2019ஆம் ஆண்டின்படி கணக்கிடுவதாக, பேஸ்புக் நிறுவனத்தின் 15ஆம் ஆண்டுவிழா தினத்தில் சி.இ.ஓ மார்க் சக்கர்பர்க் கூறியுள்ளார். பார்ச்சூன் தகவலின்படி, முன்னதாக பேஸ்புக் நிறுவனம் 6 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர்களின் போனஸை நிர்ணயித்தது.

அதில், பயனாளர்களின் வளர்ச்சி, பயனாளர்களின் பகிர்வு உயர்வு, புராடக்ட் தர மேம்பாடு ஆகியவை அடங்கு, தற்போது மாற்றம் செய்யப்பட்ட இலக்குகள் மூலம் போனஸ் கணக்கீட்டை அமைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்