ஆப்நகரம்

ஏர்டெல் vs ஜியோ vs பிஎஸ்என்எல்: எது பெஸ்ட்?

98 ரூபாய் ஆஃபரில் ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் ஆஃபர்களை இங்கு காணலாம்

Samayam Tamil 29 Aug 2018, 11:24 pm
98 ரூபாய் ஆஃபரில் ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் ஆஃபர்களை இங்கு காணலாம்
Samayam Tamil airtel vs jio vs bsnl


தற்போதைய சூழலில் ஏர்டெல், ஜியோவுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறது. ஏர்டெலில் இதுவரை 98 ரூபாய் ரீசார்ஜில், 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. ஆனால், ஏர்டெலுக்குப் போட்டியாக ஜியோ நிறுவனம், 98 ரூபாயில் 1.5 ஜிபி டேட்டா வழங்கியது. மேலும், அன்லிமிடேட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் போன்ற சலகைகளும் 28 நாட்களுக்கு வழங்கியது. மேலும், ஏர்டெலை முந்திக் கொண்டு ஜியோவுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனமும் 2 ஜிபி டேட்டா வழங்கியது.இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குபெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காகவும், 99 ரூபாய் ரீசார்ஜில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3 ஜிபி 4G டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.,

அடுத்த செய்தி

டிரெண்டிங்