ஆப்நகரம்

BSNL ரூ.499 திட்டத்தில் அதிரடி திருத்தம்; செப்டம்பர் 26 க்குள் ரீசார்ஜ் பண்ணிடுங்க!

பிஎஸ்என்எல் தனது 100 ஜிபி CUL திட்டத்தை மேம்படுத்தி உள்ளது, அதாவது ரூ.499 FTTH பிராட்பேண்ட் திட்டத்தில் திருத்தம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இது செப்டம்பர் 26 2020 வரை செல்லுபடியாகும்.

Samayam Tamil 3 Aug 2020, 6:52 pm
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது வருகிற செப்டம்பர் 26, 2020 வரை இந்தியா முழுவதும் அதன் பல வட்டங்களில் 499 பாரத் ஃபைபர் திட்டத்தை விளம்பர அடிப்படையில் மேம்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil BSNL Rs.499


அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆபரேட்டர் இந்தியா முழுவதும் அதன் ரூ.499 திட்டத்தை பல வகையிலான நன்மைகளின் கீழ் வழங்குகிறது.

பல்வேறு வட்டங்களில் பாரத் ஃபைபர் சேவைகளின் கீழ் 100GB CUL என அழைக்கப்படும் நிலையான ரூ.499 திட்டம் பயனர்களுக்கு 100 ஜிபி வரையிலான டேட்டாவை 20 எம்.பி.பி.எஸ் வரையிலான வேகத்தின் கீழ் உலாவ உதவுகிறது.

குறிப்பிட்ட டேட்டா வரம்பை தீர்த்த பின்னர் இணைய வேகம் 2 எம்.பி.பி.எஸ் ஆக குறையும். கூடுதலாக, இந்த 100 ஜிபி CUL திட்டம் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்பு நன்மைகளையும வழங்குகிறது.

இனிமேல் "இந்த" இலவச நன்மை கிடைக்காது; ஏர்டெல் பயனர்களுக்கு அடுத்த அடி!

இப்போது இந்த ஆபரேட்டர் அதன் கேரளா மற்றும் லட்சத்தீவு வட்டங்களில் தனது 100 ஜிபி CUL திட்டத்தை மேம்படுத்தியுள்ளது. தற்போது இது "200GB CUL CS358" என்று திருத்தப்பட்டு அதே ரூ.499 என்கிற விலையின் கீழ் பயனர்களுக்கு 200 ஜிபி வரையிலான டேட்டாவை 20 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் உலாவ உதவுகிறது. இருப்பினும் நிலையான ரூ.499 திட்டத்தைப் போலவே, பிஎஸ்என்எல் 200 ஜிபி CUL சிஎஸ் 358 திட்டத்தில் 200 ஜிபி டேட்டா வரம்பை எட்டும் பயனர்களின் வேகம் 2 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

தவிர 200 ஜிபி சிஎல் சிஎஸ் 358 திட்டத்தில் சேர்ந்த பயனர்கள் இந்தியா முழுவதும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்பு நன்மைகளையம் பெறுவார்கள்.

200GB CUL CS358 திட்டமானது அரை வருடாந்திர, வருடாந்திர, இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு அடிப்படையில் சந்தாவுக்கு கிடைக்கிறது. 200 ஜிபி சி.யூ.எல் சி.எஸ் .358 திட்டத்தின் அரை வருடாந்திர பேக் ரூ.2994 க்கும், வருடாந்திர பேக் ஆனது ரூ.5998 க்கும், இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு பேக்குகள் முறையே ரூ.11,976 க்கும் மற்றும் ரூ.17,964 க்கும் அணுக கிடைக்கிறது.

ரூ.15,000 க்கு ஒன்பிளஸ் நோர்ட் லைட்; ரூ.20,000 க்கு ஒன்பிளஸ் நோர்ட் லைட் ப்ரோ!

முக்கியமாக, இந்த ஆபரேட்டர் குறிப்பிட்ட திட்டத்தின் வருடாந்திர, இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு பொதிகளுக்கான சந்தா செலுத்தும் பயனர்களுக்கு ஒரு மாதம், மூன்று மாதம் மற்றும் நான்கு மாத பாராட்டு சந்தாவையும், அதாவது இலவச சந்தாவையும் வழங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்