ஆப்நகரம்

நிலவில் சீனா புதிய சாதனை; இருண்ட பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலம்!

ஷாங்காய்: சீன செயற்கைக்கோள் சாங்’இ-4 நிலவின் இருண்ட பகுதியில் தரையிறங்க உள்ளது.

Samayam Tamil 31 Dec 2018, 10:54 am
நிலவை ஆய்வு செய்வதற்காக சாங்’இ-4 என்ற செயற்கைக்கோளை லாங் மார்ச்-3பி என்ற ராக்கெட் மூலம் சீனா விண்ணில் செலுத்தியது. இதில் நிலவின் மேற்பரப்பு மற்றும் உட்பகுதியை ஆய்வு செய்வதற்காக, லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
Samayam Tamil Dark Side Moon


இந்த விண்கலம் டிசம்பர் 12ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து நேற்று தனக்குரிய சுற்றுவட்டப் பாதையை நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிலவின் இருண்ட பகுதியில் முதல்முறையாக தரையிறங்க திட்டமிட்டுள்ளது.

இதனை அந்நாட்டு தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் தரையிறங்கும் சரியான நேரம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. புவியின் துணைக்கோளான நிலா, குறிப்பிட்ட வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

இதன் ஒருபக்கம் மட்டுமே புவிக்கு தெரியும் வகையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இதனால் மறுபுறம் உள்ள இருண்ட பகுதியை யாரும் பார்த்ததில்லை.

முன்னதாக செயற்கைக்கோள் ஒன்று நிலவின் இருண்ட பகுதியை படம் பிடித்துள்ளது. ஆனால் எந்தவொரு விண்கலமும் அங்கு தரையிறங்கியது இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்