ஆப்நகரம்

நீங்களே ஒரு ஆதார் டேட்டா பேஸ் உருவாக்கலாம்!

யார் வேண்டுமானாலும் பலரது ஆதார் தகவல்களை சேகரித்து ஒரு ஆதார் டேட்டா பேஸ் உருவாக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

Samayam Tamil 2 Jul 2018, 7:27 pm
யார் வேண்டுமானாலும் பலரது ஆதார் தகவல்களை சேகரித்து ஒரு ஆதார் டேட்டா பேஸ் உருவாக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.
Samayam Tamil Aadhaar-Story-1024x614


ஆதார் தகவல்கள் பாதுகாப்பானதா இல்லையா என்ற விவாதம் ஆதார் ஆணையத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்படும் போதெல்லாம், அதனை ஆதார் ஆணையம் உடனே மறுத்தும் வருகிறது.

இந்நிலையில், பத்திரப் பதிவு செய்தவர்களின் ஆதார் உள்ளிட்ட பல தகவல்களை யார் வேண்டுமானாலும் வாங்கும் வசதியை ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வழங்குகின்றன.

உதாரணமாக, ஆந்திர மாநில இணையதளத்தின் மூலம் ஒரு பத்திரப்பதிவு ஆவணத் தொகுப்பின் நகலையும் ரூ. 210 முதல் 235 கட்டணத்தில் வாங்கலாம். ஒரு தொகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பத்திரப்பதிவு விவரங்கள் (பெயர், முகவரி, ஆதார், கைரேகை) இருக்கும். ஒரு பத்திரப் பதிவில் வாங்குபவர், விற்பவர், சாட்சி என மூன்று பேரின் விவரங்கள் இருக்கும். அதாவது, ஒரு நபரின் ஆதார் தகவலை ரூ50-60 செலவில் ‘முறைப்படி’ வாங்கிவிடலாம்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆதார் விவரங்களைக் கொண்டு சொந்தமாக பெயர், முகவரி, ஆதார் எண், கைரேகை ஆகியவை அடங்கிய டேட்டா பேஸ் ஒன்றையே உருவாக்கிலாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் கடந்த மாதம் இதே முறையில் 6000 நபரின் ஆதார் தகவலைக் கொண்டு ஒரு டேட்டா பேஸை உருவாக்கியதை ஆந்தரப் போலீசார் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்