ஆப்நகரம்

அமேசான், பிளிப்கார்ட் போட்டி: 70% அதிகமாகிறது தீபாவளி ஆஃபர்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தீபாவளி சலுகை இதுவரை இல்லாத அளவுக்கு 70% உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 28 Aug 2018, 7:23 pm
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தீபாவளி சலுகை இதுவரை இல்லாத அளவுக்கு 70% உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil 65569843


பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம் கடந்த மே மாதம் வாங்கியது. இதனால் எதிர்வரும் தீபாவளி சீசன் முதல் முறையாக நடைபெறும் அமேசான் மற்றும் வால்மார்ட் இடையேயான விற்பனை போட்டியாக அமைய உள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்கும் இந்த தீபாவளி சீசன் சலுகை விற்பனையில் கடந்த ஆண்டு 20 லட்சம் ஆர்டர்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இது 30 லட்சமாக உயரும் என்று சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

இரு நிறுவனங்களுமே பொருட்களுக்கு வழங்கும் சலுகையும் இரு மடங்கு உயர்த்தும் என்றும் தெரிகிறது. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் இந்த தீபாவளி சீசனில் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்றும் விற்பனை 70% உயரும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 10ஆம் தேதியை ஒட்டி அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்