ஆப்நகரம்

இரத்த தானம் செய்ய உதவும் பேஸ்புக்!

இரத்த தானம் செய்வதை எளிதாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது.

TNN 30 Sep 2017, 1:10 am
இரத்த தானம் செய்வதை எளிதாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது.
Samayam Tamil facebook has launched a new application to help people donate blood in india
இரத்த தானம் செய்ய உதவும் பேஸ்புக்!


பேஸ்புக் நிறுவனம் இந்தியாவிற்கு சிறப்பு கவனம் அளித்து பல்வேறு அம்சங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் எழுதியுள்ள பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது,
விபத்துக்கள் மற்றும் அறுவைச்சிகிச்சைகளின் போது பேஸ்புக்கில் இரத்த தானம் பெற பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. இதற்காக, பல பேஸ்புக் குழுக்கள் உருவாகியுள்ளன.தொடர்ந்து, இரத்த தானம் கேட்டு பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.

பல நாடுகளைப் போல, இந்தியாவிலும் பாதுகாப்பான இரத்தக் கொடையாளர்கள் குறைவு. பேஸ்புக் பயன்படுத்தாத இரத்த தானத்தில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிவதும் கடினம். இதனால், நாங்கள் சில தன்னார்வ அமைப்புகள், இரத்த வங்கிகள் மற்றும் இரத்தக் கொடையாளர்களுடன் இணைந்து இரத்த தானத்தை எளிதாக்கும் வழியை உருவாக்கியுள்ளோம்.



இரத்த கொடையாளர்கள் பேஸ்புக் மூலம் இதில் முன்பதிவு செய்து கொண்டால், ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் அவசரமான சூழ்நிலையில் அருகிலுள்ள கொடையாளருக்கு தகவல் அனுப்பப்படும் அவர்கள் மூலம் இரத்த தானத்தைப் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்