ஆப்நகரம்

’மெசஞ்சர் கிட்ஸ்’ - குழந்தைகளுக்காக பிரத்யேக சாட் செயலியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்!

குழந்தைகளுக்காக மெசஞ்சர் கிட்ஸ் எனப்படும் செயலியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

TNN 6 Dec 2017, 3:50 pm
சென்னை: குழந்தைகளுக்காக மெசஞ்சர் கிட்ஸ் எனப்படும் செயலியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Samayam Tamil facebook launches messenger version for young children
’மெசஞ்சர் கிட்ஸ்’ - குழந்தைகளுக்காக பிரத்யேக சாட் செயலியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்!


உலகில் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழ்கிறது. இதன் பிரத்யேக செயலியாக மெசஞ்சர் திகழ்கிறது.

இதனை பெரும்பாலும் வயது வந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் மெசஞ்சர் கிட்ஸ் எனப்படும் செயலியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் குழந்தைகள் தங்கள் நண்பர்களை சேர்க்கவும், குறுந்தகவல்களை அழிக்கவும் முடியாது. பெற்றோர்கள் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்கள் நிறைந்துள்ளன.

இந்த செயலியை பெற்றோர்கள் பயன்படுத்தும் பேஸ்புக்கில் எக்ஸ்டென்ஷன் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.

முதல்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயலி வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும்.

விரைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த செயலி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook launches messenger version for young children.

அடுத்த செய்தி

டிரெண்டிங்