ஆப்நகரம்

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்- தேர்தல் ஆணையத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உறுதி

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம் எனதேர்தல் ஆணையத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உறுதி அளித்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2018, 7:08 pm
போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Samayam Tamil fb twitter logo
தேர்தல் ஆணையத்திடம் உறுதி அளித்த ஃபேஸ்புக், ட்விட்டர்


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதுபோன்ற போலி பிரச்சாரம் இந்திய தேர்தலில் நடைபெறாமல் இருக்க சமூகவலைதள நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில், போலி செய்திகள் பரவலைத் தடுக்க வாட்ஸ்-அப் நிறுவனம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் எந்த உறுதியையும் இதுவரை வழங்காமல் இருந்தது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திடம், “தேர்தலின் புனிதத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்தஒரு செயலையும் எங்கள் தளத்தில் அனுமதிக்கமாட்டோம்” என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக தேர்தல் ஆணையர் ஓபி ராவத் தெரிவித்துள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்