ஆப்நகரம்

Finger Ring Watch: கையில தான வாட்ச் கட்டுவோம்; இனி விரல்லயே கட்டலாம் - வந்தாச்சு ரிங் வாட்ச்!

கைகளில் கடிகாரம் மாட்டிய காலம் போய், தற்போது விரல்களில் கடிகாரம் மாட்டும் காலம் வந்துவிட்டது.

Samayam Tamil 6 Feb 2019, 5:51 pm
எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும், கைக்கடிகாரங்களுக்கு இருக்கும் மவுசு எப்போதும் குறைவதில்லை. இருப்பினும் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மூலம் மணி பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டோம்.
Samayam Tamil Ring Watch


இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் மோதிர கடிகாரம் விற்பனைக்கு வந்துள்ளது. இது சர்ஜிக்கல் ஸ்டீல் எனப்படும் உயர் ரக உலோகத்தால் செய்யப்பட்டது. எனவே மிகவும் உறுதியாக இருக்கும். இதில் நீல நிற எல்.இ.டி விளக்குகள் சரியான நேரத்தை டிஜிட்டலாக காட்டுகின்றன.

மணி பார்க்க வேண்டும் என்றால், இந்த மோதிர கடிகாரத்தை ஒரு சுற்று சுற்ற வேண்டும். இதையடுத்து 15 நொடிகள் நேரம் காண்பிக்கும். பின்னர் மீண்டும் சாதாரண மோதிரம் போல மாறிவிடுகிறது. இதற்கு அடிக்கடி பேட்டரி பிரச்சனை எழாது.

ஏனெனில் 3 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும் வகையில் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். வயர்லெஸ் சார்ஜிங்கும் செய்து கொள்ளலாம். மொத்தம் 18 அளவுகளில் மோதிரம் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை 250 அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்