ஆப்நகரம்

புதிய அளவுகளில் கூகுள் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கர்

கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கரை புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது.

TNN 5 Oct 2017, 4:52 am
கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கரை புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil first look at google home mini and max
புதிய அளவுகளில் கூகுள் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கர்


கூகுள் நிறுவனம் புதன்கிழமை பல்வேறு புதிய கேஜெட்களை அறிமுகம் செய்திருக்கிறது. மொபைல் போன்கள் (Pixel 2, Pixel 2 XL), லேப்டாப் (PixelBook), ஹெட்செட் (Pixel Buds), ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் (Google Home Mini, Google Home Max), தானியங்கி கேமரா (Google Clips) என பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றில், ஏற்கெனவே அறிமுகமான கூகுள் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கர் கூகுள் ஹோம் மினி மற்றும் கூகுள் ஹோம் மேக்ஸ் என்ற புதிய பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஹோம் மினி சிறியதாவும் ஹோம் மேக்ஸ் பெரியதாவும் உள்ளது.



ஹோம் ஆட்டோமேஷன் (Home Automation) எனப்படும் தானியங்கி வசதிகளுடன் கூடிய வீட்டை உருவாக்குவதில் முதல் அடியாக கூகுள் ஹோம் என்ற ப்ளூடூத் ஸ்பீக்கரை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஆப்பிள் நிறுவனமும் போட்டிக்கு சிரி என்ற ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்