ஆப்நகரம்

Samsung M30: ஆன்லைன் விற்பனை ஆரம்பம்!

அண்மையில் சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது.

Samayam Tamil 11 Apr 2019, 11:03 am
அண்மையில் சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது.
Samayam Tamil samsung m30


சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் போன்களில் மூன்றாவது மாடலான சாம்சங் கேலக்ஸி எம்30 போன்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது. சாம்சங் மற்றும் அமேசானில் மட்டுமே சாம்சங் கேலக்ஸி எம் 30 கிடைக்கிறது. ஆனால், குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே விற்பனை அறிவிக்கப்பட்டதால், இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ரெட்மி நோட் 7 ப்ரோ -வுக்குப் போட்டியாக சாம்சங் இருப்பதால், சாம்சங் வாடிக்கையாளர்கள் இதனை பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
(Samsung Galaxy M30: எப்படி இருக்கு சாம்சங்?)ஒவ்வொரு முறையும் ஆன்லைன் சேல் தொடங்கியதும், சிறிது நேரத்திலேயே சாம்சங் எம் 30 விற்று தீர்ந்து விடுகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு சாம்சங் எம் 30 ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இதனை அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
Redmi Note 7 Pro VS Samsung Galaxy M30: இவற்றில் எதை வாங்கலாம்??
சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்:
6.4 இஞ்ச் முழு எச்டி + சூப்பர் அமோல்டு யு நோச் டிஸ்பிளே
9.5 UI, ஆண்டிராய்டு 8.1 ஓரியோ
1.8 ஜிஎச்செட் octa-core Exynos 7904 பிராசஸசர்
4ஜிபி ரேம்/64 ஜிபி ரோம், 6ஜிபி ரேம்/128ஜிபி ரோம்
ரியர் கேமரா:
13 மெகாபிக்செல் பிரைமரி கேமரா
5 மெகாபிக்செல் டெப்த் சென்சார்
5 மெகாபிக்செல் வையிடு ஆங்கிள் கேமரா
முன்பக்க கேமரா: 16 மெகாபிக்செல்
பேட்டரி: 5000 எம்ஏஎச், வேகமாக சார்ஜ் செய்யும் சப்போர்ட்
போனின் பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரிண்டு சென்சார்
விலை :
4ஜிபிரேம்/64ஜிபி ரோம் வேரியண்ட்: ரூ 14,990
6ஜிபி ரேம்/128ஜிபி ரோம் வேரியண்ட்: ரூ17,000

அடுத்த செய்தி

டிரெண்டிங்