ஆப்நகரம்

இந்தியாவின் பாரம்பரியங்களை பிரதிபலித்த கூகுள் டூடுல்!

இந்தியாவின் 73வது சுதந்திரத்தினத்தை ஒட்டி, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பாரம்பரியங்கள் அனைத்தும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Aug 2019, 3:42 pm
நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் பிரத்யேகமாக டூடுல் வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் பணிபுரிந்து வரும் இந்திய வம்சாவளியான ஷைவாலினி குமார் என்பவர் இந்த டூடுளை வடிவமைத்துள்ளார். இதில், செயற்கைகக்கோள், இந்திய நாடாளுமன்றம், ஆட்டோ ரிக்ஷா, கரும்பலகை, புலி என இந்தியாவின் பாரம்பரியங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
Samayam Tamil google doodle independence day


அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

இது தொடர்பாக ஷைவாலினி குமார் விளக்கம் அளிக்கையில், ‘உலகில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தியா மிகச்சிறந்த உதாரணம். நான் இந்தியாவின் முக்கிய சாராம்சங்கள் அனைத்தையும் டூடுலில் கொண்டு வரவிரும்பினேன். அதன்படி, நமது சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றம், அறிவியல் முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டாய் செயற்கைக்கோள் ஆகியவை டூடுலில் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை பிரதிபடுத்தும் வகையில் மெட்ரோ ரயில், போக்குவரத்து ஆட்டோ ரிக்ஷாவையும், இணைந்த கைகள் இரக்கத்தையும் குறிப்பிடுகிறது. கரும்பலகையில் எழுதுவது போன்ற வடிவம் கல்விக்கான முயற்சியையும், வீரத்திற்கு அடையாளமாய் புலி, தூய்மைக்கு தாமரை என அத்தனை அம்சங்களும் கூகுள் டூடுல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. '. இவ்வாறு ஷைவாலினி குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்