ஆப்நகரம்

காப்பியடித்த கூகுள்; 9 பில்லியன் டாலர் அபராதம்!

ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா தொழில்நுட்பத்தை, காப்பியடித்ததாக கூகுள் நிறுவனத்துக்கு 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Samayam Tamil 28 Mar 2018, 5:51 pm
ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா தொழில்நுட்பத்தை, காப்பியடித்ததாக கூகுள் நிறுவனத்துக்கு 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil google


கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் ஜாவா மொழி என்பது மிகமிக இன்றியமையதாது ஆகும். இது டிவி, பிரிட்ஜ் உட்பட அனைத்து நவீன பொருட்கள் தொழில்நுட்பத்திலும் பயன்படுகிறது.

கடந்த 1990ம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனம் ஜாவா மென்பொருளை உருவாக்கியது. இதனை பல நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.

பின்னர், ஆரக்கிள் என்ற நிறுவனம் சன் மைக்ரோசிஸ்டத்தின் ஜாவாவை, அதன் அனுமதி பெறாமல் பரப்பியதாக குற்றச்சாட்டுக்கள் வந்ததையடுத்து, அந்த நிறுவனத்தையே ஆரக்கிள் விலைக்கு வாங்கிவிட்டது.

இதனிடையே கூகுள் நிறுவனம், மொபைலுக்கான சாப்ட்வேரில் ஜாவா மொழியை உட்புகுத்தியது. பின்னர், அதனை ஆண்ட்ராய்டு டால்விக் என்று பெயரிட்டது. ஆனால், ஜாவாவிற்கும், கூகுளின் ஆண்ட்ராய்டு டால்விக் மென்பொருளுக்கும் பெரிதாக எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்றும், ஜாவாவை தான், கூகுள் நிறுவனம் டால்விக் என்ற பெயரில் காப்பியடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும், இதன் மூலம் கூகுள் நிறுவனம் 42 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது.


இதனையடுத்து, ஜாவா மென்பொருளின் உரிமம் பெற்ற ஆரக்கிள் நிறுவனம், கூகுளுக்கு எதிராக கடந்த 2009ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், 2012 ம் ஆண்டு கூகுளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து, ஆரக்கிள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கு விவகரத்தில் கூகுளே வெற்றி பெற்றது. ஆரக்கிள் நிறுவனமும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் அடிப்படையில், அடுத்தடுத்த கூகுளுக்கு எதிராக நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தது.

சுமார் 8 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்துக்கும் ஆரக்கிள் நிறுவனத்துக்கும் நடந்த இந்த விவகாரத்தில், தற்போது, கூகுள் நிறுவனம் காப்புரிமை மீறியதாக உறுதியாகியுள்ளதாகவும், எவ்வளவு நஷ்டஈடு வழங்கலாம் என்பது குறித்து கீழ் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பில் கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு விவகாரத்தில், ஆரக்கிளை தோற்கடித்த கூகுள் நிறுவனத்துக்கு, இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்