ஆப்நகரம்

ஷாப்பிங் இணையதளமாக மாறும் யூடியூப்!

அமேசான் நிறுவனம் இணைய விளம்பரங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து லாபம் பெறுகிறது. தனது தளத்தில் வீடியோ விளரம்பங்களைப் புகுத்தவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 6 May 2019, 4:09 pm
கூகுள் நிறுவனம் தனது யூடியூப் இணையதளம் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
Samayam Tamil youtube-shopping-cart2-fade-ss-1920


2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக யூடியூப் இணையதளத்தின் மூலம் ஷாப்பிங் செய்வதை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

யூடியூப் வீடியோவுக்குக் கீழே பொருட்களின் விலையுடன் உள்ள இணைப்புகள் தோன்றும். இந்த இணைப்புகளை கிளிக் செய்து அந்தப் பொருளை வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.

இத்துடன் தனது கூகுள் எக்ஸ்பிரஸ் மார்க்கெட்பிளேஸ் என்ற விளம்பரப் பிரிவுக்கு கூகுள் ஷாப்பிங் என பெயர் மாற்றம் செய்யவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

அமேசான் நிறுவனம் இணைய விளம்பரங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து லாபம் பெறுகிறது. தனது தளத்தில் வீடியோ விளரம்பங்களைப் புகுத்தவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.

இதனால் கடும் சவாலாக இருக்கும் அமேசானை சாமாளிக்க கூகுள் தனது விளம்பர உத்தியை மறுபரிசீலனை செய்கிறது.

இந்தியாவில் கூகுள் ஷாப்பிங் என்ற சேவை அறிமுகமாகியுள்ளது. இது தற்போது அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா போன்ற பல்வேறு வர்த்தக இணையதளங்களை ஒருங்கிணைத்து வழங்கும் தளமாக செயல்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்