ஆப்நகரம்

2021 ஜனவரி 15 முதல் 11 இலக்க மொபைல் நம்பர்; ஏன்? எதற்காக?

2021 ஜனவரி 15 இலிருந்து மொபைல் எண்களுக்கு அழைப்பதற்கு முன்பு லேண்ட்லைன் பயனர்கள் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டியது அவசியம் என்கிற புதிய விதிமுறை அறிவிப்பு..

Samayam Tamil 26 Nov 2020, 5:18 pm
2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் மொபைல் எண்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்பு லேண்ட்லைன் பயனர்கள் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 11 digit mobile number


அதாவது நீங்கள் 80##70##60 என்கிற மொபைல் நம்பரை லேண்ட்லைன் வழியாக அழைக்க வேண்டும் என்றால், வருகிற ஜனவரி 15 முதல் குறிப்பிட்ட மொபைல் நம்பருக்கு முன் '0' ஐ சேர்த்து 080##70##60 என்று அழைக்க வேண்டும்.

முன்னதாக, தொலைதொடர்புத் துறை (டிஓடி) தனது இணையதளத்தில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அனைத்து லேண்ட்லைன் எண்கள் வழியாகவும் மொபைல் எண்களை டயல் செய்யும் போது பூஜ்ஜியத்தை சேர்ப்பதற்கான முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. தற்போது அது எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்கிற தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொபைல் அழைப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து எங்களுடனும் 2021 ஜனவரி 15 முதல் ‘0’ சேர்த்து டயல் செய்யப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய திருத்தத்தின் கீழ், fixed to fixed, mobile to fixed மற்றும் mobile to mobile அழைப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது.

மேலும், சந்தாதாரர் '0' என்கிற Prefix-ஐ பயன்படுத்தாமல் எதாவது ஒரு மொபைல் எண்ணிற்கு அழைத்தால், அவர் டயல் செய்யும் போதெல்லாம் பொருத்தமான அறிவிப்பு இயக்கப்படும். மேலும் பூஜ்ஜியத்துடன் டயல் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சந்தாதாரர்களுக்கு தெரிவிக்க பொருத்தமான அறிவிப்பு இயக்கப்படும் என்று DoT குறிப்பிட்டுள்ளது. அதாவது லேண்ட்லைன் பயனர்கள் 0 என்ற Prefix இல்லாமல் மொபைல் எண்ணை டயல் செய்யும் போதெல்லாம் இந்த அறிவிப்பு இயக்கப்படும்.

அனைத்து சந்தாதாரர்களுக்கும் ‘0’ டயலிங் வசதி வழங்கப்படும் என்றும், இதன் வழியாக மொத்தம் சுமார் 2539 மில்லியன் நம்பரிங் தொடர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டது. இது எதிர்கால பயன்பாட்டிற்கு போதுமான எண்ணிக்கையிலான வளங்களை விடுவிக்கும் என்றும் அது விளக்கமளித்துள்ளது.

எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட வகை அழைப்பிற்கான டயலிங் Prefix-ஐ அறிமுகப்படுத்துவது தொலைபேசி எண்ணில் இலக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒத்ததல்ல என்று டிராய் குறிப்பிட்டுள்ளது.

"போதுமான எண்ணிக்கையிலான வளங்களை விடுவிப்பது எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான இணைப்புகளைச் சேர்க்கும் மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும்" என்று தகவல் தொடர்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்