ஆப்நகரம்

Jio vs Airtel: 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளானை தேடுறீங்களா? இதோ உங்களுக்கான 6 திட்டங்கள்!

84 நாட்கள் செல்லுபடியாகும் Reliance Jio மற்றும் Bharti Airtel திட்டங்களும், அவற்றின் நன்மைகளும்.

Samayam Tamil 20 Jan 2020, 6:33 pm
என்னதான் புதிது புதிதாக பிளான்களை அறிமுகம் செய்தாலும் கூட பெரும்பாலான பயனர்களின் கவனமானது 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் மீது தான் உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு "மூன்று மாத கால சலுகைகள்" என்கிற "சொல்லை" ஜியோ பழக்கி வைத்துள்ளது. இது தவிர பெரும்பாலான மக்களுக்கு அது தான் சரியான பட்ஜெட் திட்டமும் கூட!
Samayam Tamil here the best plans with 84 days validity in reliance jio and bharti airtel
Jio vs Airtel: 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளானை தேடுறீங்களா? இதோ உங்களுக்கான 6 திட்டங்கள்!


84 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 6 பிளான்கள் உள்ளன!

கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட விலை உயர்விற்கு பின்னர், 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் எதுவுமே பட்ஜெட் விலை நிர்ணயத்திற்குள் இல்லை. இந்த இடத்தில் தான் எந்த நிறுவனத்தின் 84 வேலிடிட்டி பிளானை தேர்வு செய்வது என்கிற குழப்பம் மேலோங்குகிறது. ஒருவேளை உங்களுக்குள்ளும் இந்த குழப்பம் இருக்கிறது என்றால்,கவலையை விடுங்கள்! நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனெனில் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை இங்கே மொத்தமாக பட்டியலிட்டோம். இதன் மூலம் நீங்கள் மிகவும் எளிமையாக உங்களுக்கான சிறந்த 84 நாட்கள் வேலிடிட்டி பிளானை தேர்வு செய்ய முடியும். 82 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை பொறுத்தவரை பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிடம் தலா 3 திட்டங்கள் உள்ளன.


WhatsApp ALERT: பிப்ரவரி 1 முதல் ஆயிரக்கணக்கான போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது; வெளியானது லிஸ்ட்! இதுல உங்க போன் இருக்கா?

ஜியோ ரூ.329 திட்டம்:

84 நாட்கள் வேலிடிட்டி பட்டியலில் முதலாவதாக இருக்கும் இந்த திட்டம் மொத்தம் 6ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் 3000 நிமிடங்கள் ஜியோ அல்லாத நெட்வொர்க் உடனாக அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோ ரூ.329 ஆனது ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகலை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.379 திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் 84 நாட்கள் வேலிடிட்டி பட்டியலில் முதலாவதாக இருக்கும் இந்த திட்டம் மொத்தம் 6 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஜியோவை போல் அல்லாமல் இது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நமையையும் மற்றும் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 900 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல் ரூ.379 ஆனது ஷா அகாடமியில் இலவசமாக 4 வார கோர்ஸ், விங்க் மியூசிக் அணுகல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பின் பிரீமியம் அணுகல் மற்றும் FASTag இல் 150 கேஷ்பேக் ஆகியவைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.555 திட்டம்:

84 நாட்கள் வேலிடிட்டி பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் 3000 நிமிடங்கள் ஜியோ அல்லாத நெட்வொர்க் உடனாக அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோ ரூ.555 ஆனது ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகலை வழங்குகிறது.


Jio New Offer: இந்த சலுகை பற்றி தெரிஞ்சா ஏர்டெல், வோடாபோன் பக்கமே நீங்க போக மாட்டீங்க!

ஏர்டெல் ரூ.598 திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் 84 நாட்கள் வேலிடிட்டி பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல் ரூ.598 ஆனது ஷா அகாடமியில் இலவசமாக 4 வார கோர்ஸ், விங்க் மியூசிக் அணுகல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பின் பிரீமியம் அணுகல் மற்றும் FASTag இல் 150 கேஷ்பேக் ஆகியவைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.599 திட்டம்:

84 நாட்கள் வேலிடிட்டி பட்டியலில் மூன்றாவதாக இருக்கும் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் 3000 நிமிடங்கள் ஜியோ அல்லாத நெட்வொர்க் உடனாக அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோ ரூ.599 ஆனது ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகலை வழங்குகிறது.


வெறும் ரூ.179 க்கு புதிய ஏர்டெல் பிளான்; ஆனால் 2 லட்சம் "மதிப்பிலான" நன்மைகள்! அம்பானியே ஆடிப்போயிருப்பாரு!

ஏர்டெல் ரூ.698 திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் 84 நாட்கள் வேலிடிட்டி பட்டியலில் மூன்றாவதாக இருக்கும் இந்த திட்டம் தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல் ரூ.698 ஆனது ஷா அகாடமியில் இலவசமாக 4 வார கோர்ஸ், விங்க் மியூசிக் அணுகல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பின் பிரீமியம் அணுகல் மற்றும் FASTag இல் 150 கேஷ்பேக் ஆகியவைகளை வழங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்