ஆப்நகரம்

Goodbye HIKE : முடிவுக்கு வந்த ஸ்டிக்கர் சாட் ஆப்; பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

ஹைக் ஆப் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. ஏன், எதற்காக வாட்ஸ்அப் உடன் போட்டி போடவில்லை...

Samayam Tamil 18 Jan 2021, 9:19 am
தொலைதூரத்தை குறைக்க இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்கள் முன்னெப்போதை விடவும் அவசியமாகிவிட்டன. பயனர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்ந்து இணைந்திருக்க பல்வேறு வகையான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பயன்பாடுகள் உள்ளன.
Samayam Tamil Hike


அந்த பட்டியலில் மிகவும் பிரபலமான இடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் அதன் சர்ச்சைக்குரிய தனியுரிமைக் கொள்கை அப்டேட்டிற்காக கடுமையான (டவுன்லோட்) பின்னடைவு மற்றும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Signal ஆப்பிற்கு மாறனும் ஆனா வாட்ஸ்அப் க்ரூப்பை இழக்க மனசு இல்லையா? ஒரு வழி இருக்கு!

சிக்னல், டெலிகிராம் போன்ற வாட்ஸ்அப்பிற்கான மாற்று ஆப்களின் பட்டியலில் 'ஹைக்' செயலையும் வந்திருக்க வேண்டும். ஆனால் 2012 ஆம் ஆண்டில் ஹைக் (Hike) தொடங்கப்பட்டபோது, அதன் புகழ் அதிகரித்து புதிய உயரங்களை எட்டியது. ஆனால் "சிறிது காலத்திலேயே" அது வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஏனெனில் "அந்த காலத்தில்" வாட்ஸ்அப் உலகளவில் மக்களை ஈர்த்து தள்ளியிருந்தது.

இருப்பினும் ஹைக் ஸ்டிக்கர் சாட்ஸ் மிகப்பெரிய இந்திய ஃப்ரீவேர், க்ராஸ்-பிளாட்பார்ம் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் என்று அழைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2016 க்குள், ஹைக் ஆப் 100 மில்லியனுக்கும் அதிகமான ரிஜிஸ்டர் செய்த பயனர்களைக் கொண்டிருந்தது, மேலும் 10 பிராந்திய இந்திய மொழிகளையும் இந்த ஆப் ஆதரித்தது.

ஹைக் மெசஞ்சர் ஆப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான கவின் பாரதி மிட்டல் ஜனவரி 6 ஆம் தேதி ட்விட்டரில் ஹைக் அதன் செயல்பாடுகளை முடித்துக்கொள்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் “நாங்கள் ஜனவரி 21 இல் இந்த ஸ்டிக்கர் சாட்டிற்கான சூரிய அஸ்தமனத்தை செய்வோம் என்று அறிவிக்கிறோம். உங்கள் நம்பிக்கையை எங்களுக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நாங்கள் இங்கே இருக்க மாட்டோம்.” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலைப்பாட்டில் இந்த ஆப் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்கள், அதே போன்ற பிற பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மாற்று வழிகளைத் தேடும் அதே வேளையில், ஹைக் நிறுவனம் ஏன் தனது சேவையை நிறுத்துகிறது என்பது குறித்து தெளிவு இல்லை. ஹைக் மெசஞ்சரின் பயனர்கள் தங்கள் சாட்களையும் தரவையும் ஆப்பிள் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது உடனடியாக நிறுத்தப்படுகிறது என்பதற்கான காரணம் ஹைக் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. ஆனால் கவின் பாரதி மிட்டல் ஒரு ட்வீட்டில் டெலிகிராம் அல்லது சிக்னல் போன்றவற்றுடன் எந்தவொரு இந்திய மெசேஜிங் செயலியினாலும் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

வாட்ஸ்அப்பை டெலிட் செய்யும் முன் அதிலிந்து "இந்த மேட்டரை" டவுன்லோட் செய்ய மறந்துடாதீங்க!

ஹைக் மெசஞ்சரை, வைப் மற்றும் ரஷ் (Vibe and Rush) ஆக மாற்ற இந்த பிராண்ட் தயாராக உள்ளது. இந்த இரண்டு ஆப்களும் Android மற்றும் iOS இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். எனவே அனைத்து ஹைக் மோஜிகளும் வைப் மற்றும் ரஷ் வழியாக உங்களுக்கு அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்