ஆப்நகரம்

Honor 30 மற்றும் Honor 30 Pro+ விலை, அம்சங்கள் லீக் ஆனது!

Honor நிறுவனம் அதன் ஹானர் 30 மற்றும் ஹானர் 30 ப்ரோ+ ஸ்மார்ட்போன்களை நாளை அறிமுகம் செய்யவுள்ள நிலைப்பாட்டில் அதன் விலை மற்றும் பிரதான அம்சங்கள் ஆன்லைன் வழியாக லீக் ஆகியுள்ளன.

Samayam Tamil 14 Apr 2020, 6:18 pm
ஹானர் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை முதன்மை ஸ்மார்ட்போன்களான ஹானர் 30 மற்றும் ஹானர் 30 ப்ரோ பிளஸ்-ஐ நாளை, அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
Samayam Tamil Honor 30 Pro Plus


ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட சில அம்சங்களுடன் தொடங்க வேண்டும் என்றால், ஹானர் 30 சீரிஸ் வேகமாக நகரும் பொருள்களை கூட துல்லியமாக புகைப்படம் எடுக்க உதவும் பாஸ்ட் போகஸ் தொழில்நுட்பத்துடன் வரும் என்று ஹானர் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வெய்போ சேனல் வழியாக வெளிப்படுத்தியுள்ளது.

7,040mAh பேட்டரி கொண்ட கேலக்ஸி டேப் S6 லைட்டின் விலை இவ்ளோதானா?

மேலும், ஹானர் 30 சீரிஸ் ஆனது 4 கே அல்ட்ரா-டார்க் வீடியோ, இமேஜ் ஸ்டெபிலைசேஷனுக்கான ஏஐஎஸ் மற்றும் 1920 எஃப்.பி.எஸ் சூப்பர் ஸ்லோ மோஷன் போன்ற அம்சங்களுடன் வரும் என்றும் ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏஐஎஸ் சூப்பர் வீடியோ ஸ்டெபிலைசேஷன் உடன் வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் 4கே வீடியோ பதிவு திறன்களைக் காட்டும் இரண்டு டீஸர் வீடியோவையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அப்படியாக வெளியான ஒரு வீடியோ இதன் 1920fps சூப்பர் ஸ்லோ மோஷன் கைப்பற்றலின் கீழ் நீர் நிரம்பிய பலூன் ஒன்று வெடிப்பதை காட்சிப்படுத்துகிறது.

ஹானர் 30 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை இது கிரின் 990 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், இது AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது ஆக்டா பி.டி ஃபோகஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய 50 எம்பி அளவிலான க்வாட் கேமரா அமைப்பை பெரும் என்றும், அதில் ஒரு பெரிஸ்கோப் லென்ஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Gaming ரசிகர்களின் கனவு போன் உலகம் முழுவதும் அறிமுகம்!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ,53,920க்கும் மற்றும் இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.58,235 க்கும் அறிமுகம் ஆகலாம். கடைசியாக இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ஆனது ரூ.62,590 என்கிற விலைக்குறியுடன் வரலாம்.

மேலும், ஹானர் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது சோனி ஐஎம்எக்ஸ் 700 சென்சாருடன் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது, இது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் தொழில்துறையின் மிகப்பெரிய சென்சார் என்று கூறப்படுகிறது.

இது தவிர ஹானர் 30 தொடர் ஸ்மார்ட்போன்களின் 6.57 அங்குல முழு எச்டி+ அமோலேட் டிஸ்ப்ளே, 2340 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர், 3,900 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்