ஆப்நகரம்

Honor Days Sale: ஹோனர் மொபைல்களுக்கு அட்டசமான சலுகை

பிளிப்கார்ட் இணையதளத்தில் ஹோனர் டேஸ் டீல் விற்பனையில் ஹோனர் மொபைல்களுக்கு அதிடியான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Samayam Tamil 18 Sep 2018, 11:16 am
பிளிப்கார்ட் இணையதளத்தில் ஹோனர் டேஸ் டீல் விற்பனையில் ஹோனர் மொபைல்களுக்கு அதிடியான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Samayam Tamil Honor-9N-1024-1024x642


பிளிப்கார்ட் இணையதளத்தில் ஹோனர் நிறுவனத்தின் மொபைல்கள் இன்று முதல் நான்கு நாட்கள் சலுகை விலையில் விற்கப்படுகின்றன. செப்டம்பர் 18 முதல் 21 வரை இந்த சலுகைகள் கிடைக்கும்.

Honor 9 Lite, Honor 10, Honor 9N, மற்றும் Honor 9i ஆகிய ஹோனர் நிறுவனத்தின் பிரபலமான மொபைல்களை மிகவும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். Honor 9N மொபைல் (4GB RAM/ 64GB ROM) புதிய இரு நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.

Honor 9 Lite மொபைல் (4GB RAM/ 64GB ROM) ரூ.14,999க்குக் கிடைக்கும். Honor 10 மொபைல் (6GB RAM/ 128GB ROM) ரூ.27,999க்குக் கிடைக்கும்.

நான்கு கேமரா கொண்ட ஹோனர் நிறுவனத்தின் முதல் மொபைலான Honor 9i ரூ.16,999 க்குக் கிடைக்கும். Honor 9N மொபைலின் 3GB RAM/ 32GB ROM வேரியண்ட் ரூ.11,999க்கும் 4GB RAM/ 64GB ROM வேரியண்ட் ரூ.13,999க்கும் கிடைக்கும்.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Honor 7S (2GB RAM/ 16GB ROM) மொபைலையும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை ரூ.6,999க்கு வாங்கலாம். இதில் முகத்தைக் காட்டி மொபைலை Unlock செய்யும் வசதி உள்ளது. மிகக் குறைந்த விலையில் இந்த வசதியைக் கொண்ட மொபைல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்