ஆப்நகரம்

ரூ.20,000 க்கு 40MP ட்ரிபிள் கேம் + 16MP பாப்-அப் செல்பீ; கலக்கும் ஹானர் X10!

ஹானர் X10 மற்றும் ஹானர் 10 X ஆகிய இரண்டுமே ஒன்றுதான் என்பதை முன்னரே குறிப்பிட விரும்புகிறோம்!

Samayam Tamil 6 May 2020, 8:54 pm
ஹானர் நிறுவனம் அதன் Honor X10 ஸ்மார்ட்போனை இந்த மாத இறுதியில் அதாவது மே 20 அன்று அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஹானர் எக்ஸ் 10 கடந்த ஆண்டு வெளியான ஹானர் 9 எக்ஸின் வாரிசாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இருப்பினும் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் பெயரை ஹானர் 10 எக்ஸ் என்பதற்கு பதிலாக ஹானர் எக்ஸ் 10 என்று பெயரிட முடிவு செய்துள்ளது.
Samayam Tamil Honor X10


வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் மறந்தும் செய்யக்கூடாத 9 தவறுகள்!

வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தும் போஸ்டரை, பிரபல சீன ஊடகத்தளமான வெய்போ வழியாக ஹானர் நிறுவனம் பகிர்ந்து கொண்டது. அந்த போஸ்டரின் வழியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்புடன் வரும் என்பதை தவிர, வேறெந்த அம்சங்களையும் குறித்து பேசவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் நம்பர் TEL-TN00 என்கிற பெயரின் கீழ் தரச்சான்றிதழ் தளமான் TENAA வில் தோன்றியது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போனில் ஹானர் 9 எக்ஸ் மற்றும் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களில் உள்ளதுபோல் பாப்அப் செல்பீ கேமரா இருக்கும் என்பதையும், பின்புறத்தில் எல் வடிவ ட்ரிபிள் கேமரா அமைப்பு இருக்கும் என்பதையும், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கும் என்பதையும் நம்மால் அறிய முடிந்தது.

7-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்; என்னடா நடக்குது?

சில்வர், ப்ளூ, ஆரஞ்சு மற்றும் பிளாக் போன்ற வண்ணங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஹானர் எக்ஸ் 10 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்களின் பட்டியல் இதோ:

- 6.63 இன்ச் எல்சிடி ஆஃப் ஃபுல் எச்டி+ டிஸ்பிளே
- 2,400 x 1,08 ஸ்க்ரீன் ரெசல்யூஷன்
- க்ரின் 820 SoC ப்ராசஸர்
- 5ஜி ஆதரவு
- 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ்
- மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கும்

- 4,200 எம்ஏஎச் பேட்டரி
- 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- Android 10 ஓஎஸ்

-ட்ரிபிள் கேமரா அமைப்பு
- 40 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
- 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பீ கேமரா
- அளவீட்டில் 10 163.7 x 76.5 x 8.8 மிமீ
- எடையில் 203 கிராம்

ஹானர் எக்ஸ் 10 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் பற்றிய துல்லியமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இது சுமார் 2,000 யுவான் என்கிற விலைக்குறியீட்டில் அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.21,400 க்கு விற்பனை செய்யப்படலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்