ஆப்நகரம்

ஏடிஎம் கார்டு இல்லாமல், ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி; இதோ சூப்பர் வழி!

சென்னை: ஏடிஎம் இல்லாமல் பணம் எடுக்கும் வழிமுறை குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 26 Sep 2018, 2:29 pm
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அதிக வாடிக்கையாளர்கள் உடன், முன்னணி சேவையை ஏர்டெல் வழங்கி வருகிறது. இதன் பேமெண்ட் வங்கி மூலம், சாதாரண வங்கிகள் போன்றே வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
Samayam Tamil ATM


இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் ‘My Airtel' அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். முதலில் ஐ.எம்.டி வசதி கொண்ட ஏடிஎம்மிற்கு செல்ல வேண்டும்.

அங்கு 'My Airtel' ஆப் மூலம் ‘Cash Withdrawal' ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து போனிற்கு ஓடிபி(OTP) வரும். அதைப் பதிவிட்டு ‘Self Withdrawal' ஆப்ஷன் மூலம் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

முதல் 2 பணப்பரிவர்த்தனை மட்டுமே இலவசம். அதன்பிறகு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். நாடு முழுவதும் 20,000 ஏடிஎம்களில் இந்த வசதி உள்ளது.

நடப்பாண்டின் இறுதிக்குள் 1,00,000 ஏடிஎம்களில் இந்த வசதி செய்யப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த வசதியை தனக்காகவும், பணம் எடுக்க நிற்கும் பிறருக்காகவும் பயன்படுத்தலாம்.

How to take money from ATM machine without having ATM card.

அடுத்த செய்தி

டிரெண்டிங்