ஆப்நகரம்

பாப்-அப் கேமரா கொண்ட இந்த ஹூவாய் 55 இன்ச் டிவியின் விலை இவ்ளோதானா?

Huawei நிறுவனம் Smart Screen V55i TV எனும் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் பாப்-அப் கேமராவுடன்! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

Samayam Tamil 24 Apr 2020, 6:54 pm
ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவியை நோவா 7 தொடர் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்துள்ளது. Huawei Smart Screen V55i என்று அழைக்கபப்டும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.42,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
Samayam Tamil Huawei Smart Screen V55i TV


இது பிளாக் மற்றும் சில்வர் டயமண்ட் கிரே வண்ண விருப்பங்களில் கிடைக்கும்

ஹூவாய் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் பாப்-அப் கேமரா உள்ளது. இது 1080p எச்டி வீடியோ அழைப்புகளை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. தேவைப்படும் போதெல்லாம் கேமரா மேல் எழும்பும்.

இந்த ஸ்மார்ட் டிவியில் 55 இன்ச் 4 கே எச்டிஆர் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 90 சதவீதம் டிசிஐ-பி 3 வைட் கலர் கேமன்ட் மற்றும் எம்இஎம்சி மோஷன்கம்பன்ஷேசன் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

5G ஆதரவுடன் Huawei Nova 7 Pro உட்பட 3 புதிய மாடல்கள் அறிமுகம்!

இந்த ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி 55ஐ டிவி ஆனது இரண்டு கோர்டெக்ஸ்-ஏ 73 கோர்கள் மற்றும் டூ கார்டெக்ஸ்-ஏ 53 கோர்களைக் கொண்ட ஹோங்கு க்வாட் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது மாலி-ஜி 51 ஜி.பீ.யு உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளமைக்கப்பட்ட AI fitness 2.0 செயல்பாடும் உள்ளது. இதன் மூலம், AI ஸ்மார்ட் ஐ தானாகவே மனித எலும்புகள் மற்றும் மூட்டுகளை நிகழ்நேரத்தில் அங்கீகரிக்கும், மேலும் இது வெவ்வேறு பயிற்சிகளுக்கான வழிகாட்டுதலையும் வழங்கும். மேலும், ஒருவர் உங்கள் கைகளை அசைப்பதன் மூலம் பயிற்சியை இடைநிறுத்தலாம் மற்றும் ஒருவர் வலது கையை அசைப்பதன் மூலம் பாடத்தைத் தவிர்க்கலாம்.

ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் டிவியானது 2.4 எல் பிக் சவுண்ட் கேவிட்டி ஸ்பீக்கருடன் வருகிறது, இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பு நான்கு 10W ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு 2W ட்வீட்டர்களுடன் வருகிறது.

ரூ.10,700 க்கு 5G போன்; கலக்கும் Honor 10X; எப்போது அறிமுகம்?

மேலும் இந்த ஸ்மார்ட் டி.வி ஆனது ஸ்மார்ட் க்ராஸ் ஸ்க்ரீன் அம்சத்துடன் வருகிறது, இது பயனர்கள் டிவியில் மொபைல் ஸ்க்ரீனை ப்ரொஜெக்ட் செய்ய அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி வெறும் 6.9 மிமீ தடிமன் கொண்டது மற்றும் இது எச்.டி.எம்.ஐ 2.0, 3 இன் -1 ஏ.வி போர்ட், டி.டி.எம்.பி மற்றும் யூ.எஸ்.பி 3.0 போர்ட் போன்ற பல்வேறு போர்ட்களுக்கான ஆதரவினை வழங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்