ஆப்நகரம்

கேம் விளையாடுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ‘ஹைபர்எக்ஸ் பல்ஸ்பயர் சர்ஜ்’ மவுஸ்!!

கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதற்காக, ஹைப்பர்எக்ஸ் என்ற நிறுவனம் ஹைபர்எக்ஸ் பல்ஸ்பயர் சர்ஜ் கேமிங் மவுஸ் என்ற பிரத்யேக மவுஸை அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 28 Aug 2018, 6:05 pm
கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதற்காக, ஹைப்பர்எக்ஸ் என்ற நிறுவனம் ஹைபர்எக்ஸ் பல்ஸ்பயர் சர்ஜ் கேமிங் மவுஸ் என்ற பிரத்யேக மவுஸை அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil கேம் விளையாடுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ‘ஹைபர்எக்ஸ் பல்ஸ்பயர் சர்ஜ்’ மவுஸ்!!
கேம் விளையாடுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ‘ஹைபர்எக்ஸ் பல்ஸ்பயர் சர்ஜ்’ மவுஸ்!!


ஹைப்பர்எக்ஸ் நிறுவனம், கேம் விளையாடுவதற்காகவே உருவாக்கிய ஹைபர்எக்ஸ் பல்ஸ்பயர் சர்ஜ் கேமிங் மவுஸ், கேமர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மவுஸாகும்.

இந்த பிரத்யேக மவுஸில், ஆர்ஜிபி லைட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள, பிக்ஸ்ஆர்ட் 3389 சென்சார் மற்றும் 16,000 டிபிஐ தெளிவுத்திறன் மிக துல்லியமான நகர்வுகளையும், நிலையையும் அளிக்கும் என கூறப்படுகிறது.

மவுஸில் உள்ள வலது மற்றும் இடது பட்டன்கள், 50 மில்லியன் கிளிக்குகள் வரை பயன்படுத்தக்கூடியது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓமரான் சுவிட்சுகள் கிளிக் செய்யும்போது, சுமூகமாக இருக்கும் அனுபவத்தையும், அதே சமயம் உடனடியாக செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மவுஸில் உள்ள ஆர்ஜிபி லைட் ரிங்கை, கேமர்கள் சிஸ்டம் மற்றும் சூழலின் நிலைக்கு ஏற்ப, HyperX NGenuityTM என்ற சாப்ட்வேர் மூலம் தங்களுக்கேற்றப் படி மாற்றிக்கொள்ளலாம். இந்த சாப்ட்வேரின் மூலம், டிபிஐ பட்டன் மற்றும் மவுஸில் உள்ள ஹைபர்எக்ஸ் லோகோ ஆகியவற்றையும் நமக்கு ஏற்றவாறு மாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.

கேமர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த மவுஸின் விலை ரூ.5,999 ஆகும். இந்த மவுஸ்க்கு இரண்டு வருட வாரண்டியும் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்