ஆப்நகரம்

ஜியோ போனுக்கு எதிராக படையெடுக்கும் ஐடியா, வோடஃவோன்

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ போனுக்கு போட்டியாக ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்களும் புதிய மலிவு விலை 4G மொபைல்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றன.

TNN 13 Oct 2017, 11:54 am
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ போனுக்கு போட்டியாக ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்களும் புதிய மலிவு விலை 4G மொபைல்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றன.
Samayam Tamil idea vodafone may launch jiophone rival
ஜியோ போனுக்கு எதிராக படையெடுக்கும் ஐடியா, வோடஃவோன்


ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சிம் கார்டு மூலம் இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டது. பின்னர், ஜியோ போன் என்ற பெயரில் இலவச 4G மொபைல் அறிமுகம் செய்து அசத்தியது. ரூ.1500 வைப்புத்தொகையாக கொடுத்து ஜியோ போன் வாங்கலாம். மூன்று ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு போனை திருப்பிக்கொடுத்துவிட்டு செலுத்திய வைப்புத்தொகையை முழுமையாகத் திரும்பப் பெறலாம்.

ஜியோவின் இந்த திட்டமும் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜியோ போனுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.1399 விலையில் கார்பன் A40 India என்ற 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோவுடன் போட்டிபோட ஏர்டெல் தயாராகிவிட்ட நிலையில் ஐடியா மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்களும் ரூ.1500க்குள் மலிவு விலை ஸ்மார்ட்போனை அளிக்க திட்டமிட்டுள்ளன. இதற்காக, இவ்விரு நிறுவனங்களும் லாவா, கார்பன் உள்ளிட்ட மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்