ஆப்நகரம்

ISRO: நிலவில் ஆய்வு செய்ய ஜூலை மாதம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்!

வரும் ஜூலை மாதம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 May 2019, 9:26 am
வரும் ஜூலை மாதம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Samayam Tamil Chandrayan 2


கடந்த அக்டோபர் 2008ல் சந்திராயன் - 1 நிலவிற்கு அனுப்பப்பட்டது. இது ஆகஸ்ட் 2009 வரை செயல்பட்டது. இந்த திட்டத்தில் லூனார், ஆர்பிட்டர் மற்றும் இம்பேக்டர் ஆகியவை அடங்கும். இது பி.எஸ்.எல்.எவி-எக்ஸ்.எல் ராக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது. சந்திராயன் - 2 இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது. முதலில் ஏப்ரலிலும், பின்னர் அக்டோபரிலும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக நிலவின் தெற்கு முனைக்கு அருகில் சந்திராயன் - 2 விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இம்முறை ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகியவை கொண்டு செல்லப்படும். ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III மூலம் அனுப்பப்பட உள்ளது. இதன்மூலம் தென்முனையில் சாப்ட் லேண்டிங் மூலம் விண்கலம் தரையிறக்கப்படும்.

இதையடுத்து 14 நாட்கள் தங்கியிருந்து, பகல் நேர சோதனைகள் மேற்கொள்கிறது. ரோவர் 100 மீ தூரம் சென்று, நிலவின் பரப்பை ஆய்வு செய்கிறது. மேலும் கொண்டு செல்லும் உபகரணங்கள் மூலம், பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறது.

இதன்பிறகு ஆர்பிட்டர் மற்றும் ரோவர் ஆகியவை நிலவை படம்பிடித்து 15 நிமிடங்களில் புகைப்படங்களை அனுப்பும். சந்திராயன் - 2ன் எடை 3.8 டன்களாக அதிகரித்திருப்பதாக ஏற்கனவே இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியிருந்தார். இந்த நிலையில், வரும் ஜூலை 9ம் தேதியிலிருந்து 16ம் தேதிக்குள் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று தற்போது இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்குள் அனைத்து சாதனங்களும் தயார் நிலையில், வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்