ஆப்நகரம்

Infinix Hot 10 அறிமுகம்; என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

மீடியா டெக் ஹீலியோ ஜி 70 எஸ்ஓசி, குவாட் ரியர் கேமரா அமைப்பு, 5200 எம்ஏஎச் பேட்டரியுடன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 அறிமுகம்.

Samayam Tamil 22 Sep 2020, 6:59 pm
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அதன் ஹாட் 10 என்கிற புதிய ஸ்மார்ட்போனை பாகிஸ்தானில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.9,300 க்கு அறிமுகமாகி உள்ளது.
Samayam Tamil Infinix Hot 10


5000mAh பேட்டரியுடன் தரமான பட்ஜெட் விலையில் Infinix Note 7 அறிமுகம்!

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.10,600 க்கும், இதன் டாப் எண்ட் வேரியண்ட் ஆன 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடானது தோராயமாக ரூ.11,500 க்கும் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக், மூன்லைட் ஜேட், ப்ளூ மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் வருகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்:

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் அளவிலான எச்டி + டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் இது 720x1640 பிக்சல்கள் தீர்மானத்துடன் மேல்-இடது மூலையில் பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 70 ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் ஏ.எல் லென்ஸ் ஆகியவற்றின் கலவையுடன் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.முன்பக்கத்தை பொறுத்தவரை, ஹோல் பஞ்ச் கட்டவுட்டில் 8 மெகாபிக்சல் செல்பீ சென்சார் வைக்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது, இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக மேலும் விரிவாக்கப்படலாம்.

இந்த ஸ்மார்ட்போன் கஸ்டம் XOS 7 உடன் இயங்கும் Android 10 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இது மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் வழியாக 10W சார்ஜிங் ஆதரவு கொண்ட 5200 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது.

பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ள இந்த லேட்டஸ்ட் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஃபேஸ் அன்லாக் அம்சத்தினையம் ஆதரிக்கிறது.

6000mAh பேட்டரி கொண்ட டாப் 5 லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் இதோ!

அளவீட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 171.1x77.6x8.88 மிமீ உள்ளது. இணைப்பு விருப்பங்களை, அதாவது கனெக்ட்டிவிடிகளை பொறுத்தவரை, வைஃபை, 4 ஜி, ஜி.பி.எஸ், ப்ளூடூத், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்