ஆப்நகரம்

சுந்தர் பிச்சையை பதவியை விட்டு தூக்குகிறதா Google? LinkedIn Post-ஆல் பரபரப்பு!

ஒருபக்கம், குறிப்பிட்ட LinkedIn போஸ்ட்டால் பலர் அதிர்ச்சிக்குள்ளாக, மறுபக்கம் பலர் கூகுள் சிஇஒ வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

Samayam Tamil 30 Jul 2019, 12:47 pm
"நம்ம" சுந்தர் பிச்சைக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ்நாட்டின் மற்றும் தமிழர்களின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர்களுள், நன்கு அறியப்பட்ட ஒரு முகம். உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான Google-ன் தலைமை நிர்வாக அதிகாரி.
Samayam Tamil Google Replace Sundar Pichai


Google நிறுவனத்தின் CEO ஆக சுந்தர் பிச்சை அறிவிக்கப்பட்டபோது, தமிழர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடாத குறை தான். அப்படியானதொரு பெருமையான தருணமாக அது பார்க்கப்பட்டது, இன்றளவும் பார்க்கப்படுகிறது. இந்நிலைப்பாட்டில் Google நிறுவனம், சுந்தர் பிச்சையை வேலையை விட்டு மாற்ற விரும்புகிறதா? என்கிற கேள்வியை கிளப்பி விட்டு, தமிழர்களின் நெஞ்சில் இடியொன்றை இறங்கியுள்ளது ஒரு LinkedIn Job Post.

Nokia feature Phone-ல் Chrome, YouTube! லீக் ஆன புகைப்படத்தால் ரசிகர்கள் குஷி!

Microsoft நிறுவனத்திற்கு சொந்தமான Professional networking platform ஆன LinkedIn-ல் ஒரு Job Post பதிவாகிறது. அதை பார்த்ததுமே மில்லியன் கணக்கான பயனர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஏனெனில் அந்த Job Post ஆனது Google நிறுவனத்தின் CEO பதவிக்கானது. அந்த பதவி மிகவும் மதிப்புமிக்கது என்பதை கருத்தில் கொண்டு, சில நிமிடங்களில் பலர் அந்த பதவிக்காக விண்ணப்பிகின்றனர். ஆனால் ஒரு புண்ணியமும் இல்லை.

உங்கள் லேப்டாப்பில் Dark Mode-ஐ Enable செய்வது எப்படி? (Windows & macOS)

ஏனெனில் அந்த Job Post போலியானதாகும்! இந்த Job Post-ஐ நெதர்லாந்தை சேர்ந்த ஆன்லைன் தேர்வாளரான Michel Rijnders என்பவர் பதிவிட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அது ஒரு Security bug என்பதை கண்டறிந்து ஏற்றுக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட Security bug ஆனது எந்தவொரு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ LinkedIn பக்கத்திலும், உத்தியோகபூர்வமாக தோற்றமளிக்கும் Job Post-ஐ பதிவிட பயனர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

இப்படியொரு Google App இருப்பது இத்தனை நாளாய் தெரியாம போச்சே!

வழக்கமாக, ஒரு புதிய வேலைவாய்ப்பு சார்ந்த Job Post-ஐ LinkedIn-ல் பதிவிடுவதற்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் அவர்களுக்கு பிரீமியம் அக்கவுண்ட் ஒன்றும் தேவைப்படும். ஆனால் - LinkedIn நிறுவனத்திற்கான CEO வேலைக்கான Job Post உட்பட - எந்த கட்டணமும் செலுத்தாமல் பதிவுகளை செய்ததாக Michel Rijnders கூறியுள்ளார். Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கான விண்ணப்பமானது கடந்த ஜூலை 28, 2019 அன்று வழக்கமான LinkedIn platform-ல் தோன்றியதென்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து LinkedIn வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. போலியான Job Post-களை பதிவிடுவென்பது எங்கள் சேவை விதிமுறைகளுக்கு எதிரானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்