ஆப்நகரம்

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2: இன்று கவுன்ட்டவுன் தொடக்கம்

நிலவின் தென்துருவ பகுதிக்கு சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.

Samayam Tamil 14 Jul 2019, 9:00 am
ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் ஏறப்படுமட் நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.
Samayam Tamil isro 1


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்த அந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இரு்பபதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 திட்டத்தை செயல் படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து அதிநவீன வசதிகளுடன் ரூ.610 கோடி செலவில் சந்திராயன் 2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

ராக்கெட் புறப்படுவதற்கான 20 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

ராக்கெட் ஏவப்படுவதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திரா ஆளுநர் நரசிம்மன், ஆந்திரா முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் பார்வையிடுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்