ஆப்நகரம்

GSAT 29: இறுதியான புவி கோளப்பாதையை அடைந்தது ஜிசாட் 29- இஸ்ரோ தகவல்

இந்தியாவின் அதிக எடை கொண்ட ஜிசாட் - மார்க் 3 செயற்கைக்கோள் புவி கோளப் பாதையில் வெற்றிக்கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 18 Nov 2018, 2:09 am
இந்தியாவின் அதிக எடை கொண்ட ஜிசாட் - மார்க் 3 செயற்கைக்கோள் புவி கோளப் பாதையில் வெற்றிக்கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil GSAT


ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, கடந்த 15ம் தேதி ஜி.சாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. லிக்விடு அப்போஜி மோட்டார் (LAM) பொருத்தபப்ட்டுள்ள இந்த செயற்கைக்கோள், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தப்படும் தேவைக்காக அனுப்பப்பட்டது.

ரூ. 400 கோடி செலவில் 3,423 கிலோ எடைக்கொண்ட ஜிசாட் 29 செயற்கைக்கோள், இந்தியாவின் விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் புதிய மைல்கல் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெற்றிக்கரமாக புவி கோளப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிசாட் 29 மார்க் 3 செயற்கைக்கோள் வரும் திங்கள் முதல் செயல்படத் துவங்கும் என்றும், அதற்கு முன்னதாக பல சோதனைகளுக்கு அது உட்படுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்