ஆப்நகரம்

வெறும் ரூ.200 க்குள் அன்லிமிடெட் டேட்டா & வாய்ஸ்; ஜியோவின் புதிய பிளான் அறிமுகமானது!

சமீப காலமாக அதாவது இனிமேல் இலவச அழைப்புகள் கிடையாது, கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது அல்லவா?அதை மீட்டெடுக்கும் ஜியோவின் ஒரு முயற்சி தான் இது!

Samayam Tamil 30 Nov 2019, 9:55 am
ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் அதன் சந்தாதாரர்களுக்காக புதிய ஆட்-ஆன் ப்ரீபெய்ட் வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.199 ஆகும் மற்றும் இதுவொரு வாராந்திர திட்டம் ஆகும். ஜியோ ஃபைபர் சந்தாதாரர்கள் தங்களிடம் ஆக்டிவ் ஆக இருக்கும் திட்டத்தின் அதிவேக டவுன்லோட் வேகத்தை தீர்த்துக்கொள்ளும் பட்சத்தில் இந்த புதிய ப்ரீபெய்ட் வவுச்சர் ஆனது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
Samayam Tamil Jio Rs.199


இந்த ரூ.199 ஜியோ ஃபைபர் வாராந்திர ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் ஆனது FTTX வீக்லி பிளான்-பிவி-199 என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை தவிர்த்து 100Mbps வேகத்திலான வரம்பற்ற டேட்டா அணுகலை மொத்தம் ஏழு நாட்களுக்கு வழங்குகிறது. ஜிஎஸ்டி உடன் சேர்த்து பார்க்கும் போது இந்த ஜியோ ஃபைபர் திட்டத்தின் விலை ரூ. 234.82 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Jio vs BSNL: இந்த மேட்டர் தெரிஞ்சா... உடனே ஒரு BSNL சிம் கார்டு வாங்க கிளம்பிடுவீங்க!

இந்த புதிய வவுச்சர் பிளான் ஆனது தற்போதுள்ள ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.699 முதல் தொடங்கி ரூ. 8.499 வரை நீளும் அனைத்து திட்டங்களுக்கும் அணுக கிடைக்கும். இந்த புதிய ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் ஆனது வழக்கமான ஜியோ ஃபைபர் திட்டங்களைப் போலவே மற்ற சில நன்மைகளையும் வழங்குகிறது. அதாவது வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகளுடன் சேர்த்து காம்ப்ளிமென்ட்ரி டிவி வீடியோ காலிங் நன்மையையும் வழங்குகிறது.

mAadhaar App: இதெல்லாம் தெரியாமல் இந்த புதிய ஆதார் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம்!

ஜியோவின் அதிகாரப்பூர்வ பட்டியலின் படி, இந்த புதிய ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் ஆனது "இணக்கமான Customer Premise Equipment-ஐ கொண்ட வாடிக்கையாளர்களுக்கு" அணுக கிடைக்கிறது. கூறப்படும் Customer Premise Equipment ஆனது இரண்டு வெவ்வேறு வகைகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்பு தொகை விருப்பங்களின்கீழ் அணுக கிடைக்கிறது: ரூ. 3,500 மற்றும் ரூ. 1,500.

BSNL அதிரடி! ஒவ்வொரு SMS-க்கும் 6 பைசா கேஷ்பேக்; இந்த ஆபரை ACTIVATE செய்வது எப்படி?

ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் இந்த புதிய ப்ரீபெய்ட் பிளான் வவுச்சரை நேரடியாக ஆட்டோ டெபிட் பயன்முறை வழியாக தங்கள் கோர் பேலன்ஸை பயன்படுத்தி பெறலாம். அல்லது ரீசார்ஜ் பயன்முறையையும் பயன்படுத்தலாம். இதற்கிடையில், புதிய ஜியோ ஃபைபர் பயனர்களுக்கான ஜியோ ஃபைபர் ப்ரிவியூ ஆபர் (முன்னோட்ட சலுகை) ஆனது நிறுத்தப்பட்டு கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் அனைத்து புதிய சந்தாதாரர்களும் கட்டணத் திட்டங்களுக்குள் உள்நுழைவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்