ஆப்நகரம்

டைரி மில்க் சாக்லேட்டில் ஒளிந்திருக்கும் ஜியோ ஆப்பர்!

ஜியோ நிறுவனம் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் , ஜியோ நிறுவனத்தின் ஓராண்டு சாதனை மற்றும் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதையொட்டி, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ள இலவச டேட்டாவினை பற்றி தெரிந்துகொள்வோம்.

Samayam Tamil 7 Sep 2018, 6:10 pm
ஜியோ நிறுவனம் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் , ஜியோ நிறுவனத்தின் ஓராண்டு சாதனை மற்றும் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதையொட்டி, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ள இலவச டேட்டாவினை பற்றி தெரிந்துகொள்வோம்.
Samayam Tamil DSC_0567-kMjD--621x414@LiveMint


உலகின் மிகப்பெரிய அனைத்து ஐபி வலையமைப்பு :

ஜியோவின் வலையமைப்புஎன்பது, 800 மொகா ஹெர்ட்ஸ் , 1800 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2300 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட்களில் வழங்கப்படும் LTE ஸ்பெக்ட்ரம் கொண்ட அதிநவீன அனைத்து ஐபி வலையமைப்பு ஆகும். இந்தியாவில் வேறு எந்த தொலைத்தொடர்புநிறுவனத்தையும்விட மிகவும் பரந்தஅளவில் LTE கவரேஜ் கொண்டது. ஜியோவின்வலையமைப்பு விரைவில் இந்தியாவின் மக்கள் தொகையில் 99% உள்ளடக்கக்கூடும்.

ஜியோதனது கட்டணத் திட்டங்களுடன் வரம்பற்ற இலவச அழைப்பை கொடுத்து வருகிறது.இந்தியாவில் மொபைல் டேட்டா நுகர்வு, ஒரு மாதத்திற்கு 20 கோடியிலிருந்து 370 கோடியாக உயர்ந்துள்ளது. உலகில் வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனத்தைவிட மிகவும் வேகமாக வாடிக்கையாளர்களை பெற்ற பெருமை ஜியோவுக்கு உண்டு.நொடிக்கு 7 வாடிக்கையாளர்களை பெற்று 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் அடைந்த நிறுவனம் ஜியோவாகும்.

இந்நிலையில் ஜியோ இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்க வழிவகை செய்துள்ளது.

மை ஜியோ ஆப்-பின் ஹோம் ஸ்கீரின் பேனரில் வரும் இலவச டேட்டா பேனரை க்ளிக் செய்தால் ‘பார்டிசிபேட் நவ்’’ என்ற ஆப்ஷன் தோன்றும் . அந்த ஆப்ஷனில் பார்கோட் ஸ்கேனிங் ஸ்கிரீன் ஓப்பன் ஆகும். அதில் ரூ 5, 10, 20 , 40 மற்றும் 100 விலையில் வாங்கப்பட்ட டைரி மில்க் சாக்லேட்டின் கவரில் இருக்கும் பார்கோடினை ஸ்கேன் செய்து 1 ஜிபி வரையிலான இலவச டேட்டாவினை பெறலாம். இந்த ஆஃபர் செப்டம்பர் 30வுடன் முடிவிற்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்