ஆப்நகரம்

ஏர்டெல்லை அடிச்சி தூக்கிய ஜியோ; ஒரே மாசத்துல இப்படியொரு சாதனையா!

புதுடெல்லி: ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகையால், ஒரே மாதத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

Samayam Tamil 13 Jan 2019, 5:37 pm
தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி ஜியோ அறிமுகம் ஆனது. இந்தியாவில் முதல் முறையாக 4ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் அதிரடியாக இணைந்தனர்.
Samayam Tamil Jio


இதன் காரணமாக ஜியோவின் மவுசு கூடியது. இலவச சலுகைகளை கட்டண பேக்குகளாக மாற்றியது. இருப்பினும் ஜியோவிற்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

குறைந்த காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களை பிடித்து புதிய சாதனை பிடித்தது. இதற்கிடையில் சர்வதேச வோல்ட்-இ ரோமிங் என்ற அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்தது.

இதனால் பிற நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களை தக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கால் டிராப் பிரச்சனை வந்த போது, ஜியோ மட்டும் சிக்காமல் அருமையான சேவையை தொடர்ந்து வழங்கியது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 1.05 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர். இது டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இது பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜியோவை தொடர்ந்து 30 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று, பி.எஸ்.என்.எல் 2வது இடத்தில் உள்ளது. அதே மாதத்தில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்.டி.என்.எல், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்