ஆப்நகரம்

இனிமே இந்த 4 ஜியோ பிளான்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது; பயனர்கள் ஷாக்!

ஜியோ நிறுவனம் அதன் ஜியோபோன் லிஸ்ட்டில் இருந்து 4 பிளான்களை நீக்கியுள்ளது.

Samayam Tamil 15 Jan 2021, 10:24 am
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.99, ரூ.153, ரூ.297, மற்றும் ரூ594 ஆகிய நான்கு ஜியோபோன் திட்டங்களையும் நீக்கியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் ஜியோபோன் ஆல் இன் ஒன் திட்டங்களை போலவே ஜியோ நெட்வொர்க் அல்லாத குரல் அழைப்பு நிமிடங்களை வழங்கவில்லை, எனவே ஜியோ நிறுவனம் இந்த இந்த திட்டங்களை அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil Removed Jio Phone Plans List 2021


சாம்சங் கேலக்ஸி S21, S21+ மற்றும் S21 அல்ட்ரா அறிமுகம்: இந்தியாவில் என்ன விலை?

ரூ.99, ரூ.297 மற்றும் ரூ.594 ஜியோபோன் திட்டங்கள் முறையே 28, 84 மற்றும் 168 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 0.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகின்றன.

இந்த மூன்று திட்டங்களும் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்புகளை வழங்குகிறது ஆனால் ஜியோ அல்லாத நெட்வொர்க்களுக்கு அழைப்பு நிமிடங்களை வழங்கவில்லை. எனவே இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யும் ஜியோபோன் பயனர்கள் ரூ.10 முதல் தொடங்கும் எஃப்யூபி திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது.

மறுகையில் உள்ள ரூ.153 ஜியோபோன் திட்டமானது ரூ.155 திட்டத்துடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாக டெலிகாம் டால்க் வலைத்தள அறிக்கை தெரிவிக்கிறது. ஏனெனில் இது கடந்த காலத்தை விட சிறந்த டேட்டா நன்மைகளுடன் வருகிறது.

ஜியோபோன் ரூ.153 திட்டம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கியது. உடன் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்புகளையும் வழங்கியது ஆனால் ஜியோ அல்லாத நெட்வொர்க் உடன் அழைப்பு நிமிடங்களை வழங்கவில்லை. மேலும், இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்கியது.

ரூ.10,000 பட்ஜெட்டில் 5000mAh பேட்டரியுடன் விவோ Y12s இந்தியாவில் அறிமுகம்!

தற்போது, ஜியோவின் இணையதளத்தில் ரூ.75, ரூ.125, ரூ.155, மற்றும் ரூ.185 ஜியோபோன் திட்டங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் ஜியோ வாடிக்கையாளர்களிடையே வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 500 நிமிட இலவச குரல் அழைப்பு நன்மையுடன் வருகின்றன.

தவிர ரூ.75 ரீசார்ஜ் திட்டம் 3 ஜிபி டேட்டாவையும், ரூ.125 ரீசார்ஜ் ஆனது 14 ஜிபி டேட்டாவையும், ரூ.155 ரீசார்ஜ் திட்டமானது 28 ஜிபி டேட்டாவையும், ரூ.185 ரீசார்ஜ் பிளான் ஆனது 56 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்