ஆப்நகரம்

இனிமே இந்த ஜியோ பிளான் 25% எக்ஸ்ட்ரா டேட்டாவை FREE-யா கொடுக்குமாம்!

தற்போதைக்கு ஜியோ சேவையில் ஆஃப்நெட் அழைப்புகளுக்கு வேலை இல்லை, எனவே பழைய நன்மையுடன் ஒப்பிடும் போது இந்த கூடுதல் நன்மை சற்றே நியாயமானதாக தெரிகிறது.

Samayam Tamil 22 Jan 2021, 7:33 pm
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் "சூப்பர்-பட்ஜெட்" பிளான் ஆன ரூ.11 4ஜி டேட்டா வவுச்சரை திருத்தியுள்ளது. முன்னதாக ரூ.11 மதிப்புள்ள ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர் ஆனது 800எம்பி அளவிலான டேட்டாவை வழங்கியது, இப்போது திருத்தத்திற்கு பிறகு இந்த திட்டம் 1 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
Samayam Tamil Jio RS 11 Data Voucher Free Data


இனிமேல் இந்த 4 ஜியோ பிளான்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது; பயனர்கள் ஷாக்!

இருப்பினும் ரூ.11 ஜியோ 4ஜி டேட்டா வவுச்சரைத் தவிர, அதன் தொகுப்பில் கீழ் இருக்கும் மீதமுள்ள ரூ.21, ரூ51 மற்றும் ரூ.101 வவுச்சர்கள் எதுவுமே எந்த வகையான திருத்தத்தையும் பெறவில்லை, அவைகள் தொடர்ந்து அதே சலுகைகளை வழங்குகின்றன.

நினைவூட்டும் வண்ணம், இந்த மாத தொடக்கத்தில், இந்த 4ஜி டேட்டா வவுச்சர்களில் இருந்தும் குரல் அழைப்பு நன்மைகள் நீக்கபடுவதாக ஜியோ அறிவித்தது.

அறியாதவர்களுக்கு, ஆஃப்-நெட் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்ப்பட்ட போது, ஜியோ நிறுவனம் அதன் 4 ஜி டேட்டா வவுச்சர்கள் உட்பட பல திட்டங்களில் ஆஃப்-நெட் அழைப்பு நிமிடங்களை தொகுத்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆஃப்-நெட் குரல் அழைப்புகளுக்கான கட்டணம் நீக்கப்பட்டது.

முந்தைய நன்மைகளுடன் ஒப்பிடும்போது ரூ.11 வவுச்சரை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் இப்போது 25% கூடுதல் டேட்டாவைப் பெறுவதால், இதுவொரு மோசமான திருத்தமாக தெரியவில்லை.

ஏர்டெல் ரூ.78 & ரூ.248 அறிமுகம்; ஒன்னு 1 மாசம்; இன்னொன்னு 1 வருஷம்!

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ரூ.11 4 ஜி டேட்டா வவுச்சர் மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் உங்களிடம் ஆக்டிவ் ஆக இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப்போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது வெறும் 4 ஜி டேட்டா வவுச்சர்கள் என்பதால், நீங்கள் குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் போன்ற பிற நன்மைகளை நீங்கள் பெற மாட்டீர்கள்.

ஜியோவிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மீதமுள்ள மூன்று 4ஜி டேட்டா வவுச்சர்களை பொறுத்தவரை, ரூ.21 பேக் ஆனது 2 ஜிபி அளவிலான 4 ஜி டேட்டாவையும், ரூ.51 ஆனது 6 ஜிபி அளவிலான 4 ஜி டேட்டாவையும், கடைசியாக உள்ள ரூ.101 பேக் ஆனது 12 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும் வழங்குகிறது.

இந்த 4 ஜி டேட்டா வவுச்சர்களைத் தவிர, ரிலையன்ஸ் ஜியோ ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 விலையில் மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டங்களையும் கொண்டுள்ளது. இவைகள் முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

மெதுவாக கட்டண உயர்வு தொடர்பான செய்திகள் மறைந்து வருகின்றன என்றே கூறலாம். உடன் முந்தையதை விட சிறந்த சலுகைகளை வழங்கும்படி ஜியோ நிறுவனம் அதன் திட்டங்களை தொடர்ந்து திருத்தியும் வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரிலையன்ஸ் ஜியோ ஆஃப்-நெட் குரல் அழைப்பு கட்டணங்களை நீக்கியது. இந்த நடவடிக்கை ஜியோவின் 4ஜி டேட்டா வவுச்சர்களை திருத்தவும் கட்டாயப்படுத்தியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்