ஆப்நகரம்

4ஜி டவுன்லோடு ஸ்பீடில் மரண மாஸ் காட்டிய ஜியோ; அப்லோடு ஸ்பீடில் சறுக்கல்!

புதுடெல்லி: 4ஜி டவுன்லோடு, அப்லோடு ஸ்பீட் குறித்து டிராய் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 19 Dec 2018, 11:31 pm
முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கி வரும் ஜியோ நிறுவனம், 4ஜி டவுன்லோடு ஸ்பீடில் கடந்த அக்டோபர் மாதம் முதலிடத்தில் இருந்தது. அப்போது சராசரி இணைய வேகம் 22.3 Mbps ஆகும். இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான 4ஜி இணைய வேகம் குறித்த தகவலை டிராய் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Jio


அதன்படி ஜியோ 20.3 Mbps சராசரி வேகத்துடன் ஜியோ முதலிடத்தில் நீடிக்கிறது. ஏர்டெல்லின் இணைய வேகம் அக்டோபரில் 9.5 Mbps வேகத்தில் இருந்து, நவம்பரில் 9.7 Mbps ஆக அதிகரித்துள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, வோடபோன் ஐடியா என்ற பெயரில் இயங்கி வருகின்றன.

இருப்பினும் இவற்றின் இணைய வேகத்தின் தனித்தனியே டிராய் வெளியிட்டுள்ளது. வோடபோனைப் பொறுத்தவரை, அக்டோபரில் 6.6 Mbps வேகத்தில் இருந்து நவம்பரில் 6.8 Mbps ஆக அதிகரித்துள்ளது. ஐடியாவைப் பொறுத்தவரை 6.4 Mbps வேகத்தில் இருந்து, 6.2 Mbps ஆக குறைந்துள்ளது.

இருப்பினும் 4ஜி அப்லோடு ஸ்பீடில் ஐடியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த அக்டோபரில் 5.9 Mbps வேகத்தில் இருந்து நவம்பரில் 5.6 Mbps ஆக குறைந்துள்ளது. இந்நிறுவனம் அக்டோபர் மாதம் சராசரி அப்லோடு வேகமாக 5.9 Mbps ஐப் பதிவு செய்துள்ளது.

டவுன்லோடு ஸ்பீடில் ஆன்லைனில் வீடியோ பார்ப்பது, இணையத்தில் ப்ரவுசிங் செய்வது, இ-மெயில் பார்ப்பது அடங்கும். அப்லோடு ஸ்பீடில் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள் போன்றவற்றை இ-மெயில் அல்லது சமூக வலைதள அப்ளிகேஷன்கள் மூலம் பகிர்ந்து கொள்வதாகும்.

கடந்த நவம்பர் மாதம் வோடபோன் 4ஜி அப்லோடு ஸ்பீடில் 4.9 Mbps வேகத்துடன் வோடபோன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜியோ 4.5 Mbps வேகத்துடன் 3வது இடத்திற்கு சரிந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்